ஜியோ தன் தனா தன் சலுகைக்கு டிராய் அனுமதி..!

ஜியோ நிறுவனத்தின் தன் தனா தன் சலுகையை தொடருவதற்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சலுகை விதிமுறைகளை மீறப்படவில்லை என டிராய் தெரிவித்துள்ளது.

ஜியோ தன் தனா தன்

  • ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகை ரத்து செய்ய டிராய் உத்தரவிட்டது.
  • தன் தனா தன் பிளானில் ரூ. 309 கட்டணத்தில் 84 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.
  • தன் தனா தன் பிளானில் ரூ. 509 கட்டணத்தில் 84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

மார்ச் 31ந் தேதி முடிவுக்கு வந்த ஹேப்பி நியூ இயர் சலுகையை தொடர்ந்து ஜியோ அறிமுகப்படுத்திய சம்மர் சர்ப்ரைஸ் என்ற மூன்று மாத இலவச சலுகைக்கு ஜியோ தடை விதித்தை தொடர்ந்து ஏப்ரல் 9ந் தேதி சம்மர் சர்ப்ரைஸ் வாபஸ் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட மூன்று மாத கால அதாவது 84 நாட்கள் வேலிடிட்டி பெற்ற பிளான் விபரம் பின் வருமாறு ;-

தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற கால்களை பெற

பிரைம் உறுப்பினர்களுக்கு – ரூ.309

பிரைம் அல்லாத அல்லது புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு – ரூ.408

தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற கால்களை பெற

பிரைம் உறுப்பினர்களுக்கு – ரூ.509

பிரைம் அல்லாத அல்லது புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு – ரூ.608

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பைனான்ஸ் எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்தள்ள தகவல் என்னவென்றால், டிராய் விதிமுறைகளுக்கு கீழாகவே கட்டண விதிமுறைகளை பின்பற்றியே ஜியோ அறிவித்துள்ள தன் தனா தன் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றில் எந்த விதிமுறையும் மீறப்படவில்லை எனவே இதனை ஜியோ தொடரலாம் என டிராய் தெரிவித்துள்ளது.

Recommended For You