இந்திய தொலைதொடர்பு வட்டாரம் மிகுந்த பரபரப்பாக இயங்க காரணமாக உள்ள ரிலையன்ஸ் ஜியோஅறிமுகப்படுத்தியுள்ள தன் தனா தன் ஆஃபர் மற்றும் முந்தைய சம்மர் சர்ப்ரைஸ் குழப்பங்களுக்கு தீர்வை இங்கே காணலாம்.

ஜியோ தன் தனா தன் vs ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் : குழப்பங்களுக்கு தீர்வு

ஜியோ தன் தனா தன்

  • தன் தனா தன் ஆஃபர் முதல் ரீசார்ஜ் மற்றும் புதிய ஜியோ சிம் வாங்குபவர்களுக்கு மட்டுமே.
  • சம்மர் சர்ப்ரைஸ் சலுகை அல்லது அதற்கு முன்பாக முதல் மற்றும் பிரைம் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு ஜூன் வரை இலவசம்..
  • ரூ. 309 கட்டணத்தில் 84 நாட்களுக்கு 84ஜிபி டேட்டா தன் தனா தன் வழங்குகின்றது.

ஜியோ தன் தனா தன் vs ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் : குழப்பங்களுக்கு தீர்வு

சம்மர் சர்ப்ரைஸ் 

பிரைம் மற்றும் முதல் மாத ரீசார்ஜ் மார்ச் 31 அல்லது ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் என வழங்கப்பட்ட சலுகைகளை ஏப்ரல் 9ந் தேதிக்கு முன்னர் ரீசார்ஜ் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மூன்று மாதம் அல்லது  ஜூன் வரை அனைத்து ஜியோ சேவைகளையும் இலவசமாக பெறலாம்.

முதல் மாதம் என செய்யப்பட்ட ரீசார்ஜ் ஜூலை மாத கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும். எனவே நீங்கள் இனி ஜூலைக்கு பிறகே அதாவது ஆகஸ்ட மாதம் அடுத்த ரீசார்ஜ் செய்தால் போதுமானதாகும்.

அது என்ன தன் தனா தன்..

ஜியோ சிம் பயன்படுத்துபவர்களில் இதுவரை எந்த ரீசார்ஜூம் செய்யாதவர்கள் அல்லது பிரைம் ரீசார்ஜ் செய்து முதல் மாத ரீசார்ஜ் செய்யாதவர்கள் அல்லது புதிதாக ஜியோ சிம் வாங்குபவர்களுக்கு மட்டுமே தன் தனா தன் திட்டங்கள் பொருந்தும். ஆனால் டன் டனா டன் என்பது இலவச சேவையாக கிடைக்காது, அதாவது மூன்று மாதங்களுக்கு மாதம் 28 நாட்கள் என கணக்கிடப்பட்டு 84 நாட்களுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிளான் அடிப்படையில் தினசரி டேட்டா வழங்கப்படும்.

ஜியோ தன் தனா தன் vs ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் : குழப்பங்களுக்கு தீர்வு

இரு ஆஃபர்களுக்கும் என்ன ஒற்றுமை ?

  • தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா அல்லது 2 ஜிபி டேட்டா (ரீசார்ஜ் செய்த பிளானை அடிப்படையில்) 128 Kbps வேகத்தில் வரம்பற்ற பொதிகள் வழங்கப்படும்.
  • அனைத்து அழைப்புகளும் இலவசம் (ரோமிங் உள்பட)
  • அனைத்து எஸ்எம்எஸ் களும் இலவசம்
  • ஜியோ ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஜியோ மூவிஸ்,ஜியோ மேக்ஸ் , ஜியோ டிவி உள்பட அனைத்து ஆப்ஸ்களும் கிடைக்கும்.

ஜியோ தன் தனா தன் vs ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் : குழப்பங்களுக்கு தீர்வு

ஜியோ தன் தனா தன் vs ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் : குழப்பங்களுக்கு தீர்வு

தன் தனா தன் VS சம்மர் சர்ப்ரைஸ்

தன் தனா தன் பிளான் கட்டண சேவை  ஆனால் சம்மர் சர்ப்ரைஸ் இலவச சேவை

தண் தனா தண் பிளான் 84 நாட்கள் ஆனால் சம்மர் சலுகை 90 நாட்கள் .

புதிதாக வந்துள்ள ஜியோ தன் தனா தன் பிளான் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் இந்த பிளானை முதல் ரீசார்ஜ் செய்பவர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். இதற்கு முன்பாக ரீசார்ஜ் செய்திருந்தால் (ரூ.303 அல்லது அதற்கு மேல்) இந்த பிளான் பொருந்தாது.

ஜியோ தன் தனா தன் vs ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் : குழப்பங்களுக்கு தீர்வு

ஜியோ இந்த பிளானின் முழுமையான விபரங்களை இதுவரை அறிவிக்கவில்லை என்பதே உண்மை…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here