ஜியோ பிரைம் இலவசமாக பெறும் வழிமுறை இதோ..!

ரூ.99 விலையில் வழங்கப்பட்டுள்ள ஜியோ பிரைம் மெம்பர்ஷீப் திட்டத்தை இலவசமாக பெறுவதற்கு ஜியோ மணி ஆப் வாயிலாக ரீசார்ஜ் செய்யும் பொழுது ரூ.100 மதிப்பில் கேஸ்பேக் சலுகையை பெறலாம்.

 ஜியோ பிரைம் இலவசம்

  • ரூ.99 பிளானில் ரீசார்ஜ் செய்யும் பொழுது கூடுதல் டேட்டாவை மார்ச் 31, 2018 வரை பெறலாம்.
  • ஜியோ மனி ஆப் வழியாக ரீசார்ஜ் செய்யும் பொழுது ஒவ்வொரு ஜியோ ரீசார்ஜ்க்கும் ரூ.50 கேஸ்பேக் பெறலாம்.
  • இந்த சலுகை அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

மார்ச் 1 முதல் மார்ச் 31 , 2017 வரையிலான காலகட்டத்தில் மைஜியோ ஆப் , ஜியோ இணையதளம் , ரீசார்ஜ் மையங்களின் வழியாக ரூபாய் 99 மதிப்பில் ஜியோ நெம்பருக்கு ரீசார்ஜ் செய்யும்பொழுது ஜியோ பிரைம் மெம்பர் ஆகலாம்.

அதாவது ஜியோ மனி செயிலியை தரவிறக்கி இன்ஸ்டால் செய்த பிறகு பிரைம் திட்டத்திற்கு ரூ.99 ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக் மற்றும் மாதந்திரா ரீசார்ஜ் ரூ.303 அல்லது அதிகமான விலையுள்ள மற்ற ஜியோ ப்ரைம் பிளான்களுக்கு மனி ஆப் வழியாக செலுத்தி ரீஜார்ஜ் செய்யும் போது ரூ.50 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You