ரிலையன்ஸ் குழுமத்தின் அங்மான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண சேவைக்கு மாறுவதனால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஜியோ பிரைம் சேவையில் கிடைக்கும் கடைசி இலவச டேட்டா பெறுவது எவ்வாறு என பார்க்கலாம்.

ஜியோ பிரைம் வழங்கும் கடைசி இலவச டேட்டா ஆஃபர் பெறுவது எவ்வாறு ?

ஜியோ பிரைம் ரீசார்ஜ்

  • ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.99 கொண்டு ரீசார்ஜ் செய்தால் ஜியோ பிரைம் மெம்பர் ஆகிவிடுவார்கள்.
  • சாதரன வாடிக்கையாளர்களை விட பன்மடங்கு கூடுதல் டேட்டா ஜியோ ப்ரைம் வழங்க உள்ளது.
  • ஜியோ பிரைமில் கிடைக்க உள்ள 10ஜிபி இலவச டேட்டா பெறும் வாய்ப்பு

ஜியோ பிரைம் உறுப்பனராக மாரச் 31,2017 மட்டுமே வாய்ப்புள்ள நிலையில் ரூ.99 கொண்டு மைஜியோ ஆப் , ஜியோ இணையதளம் மற்றும் ரீசார்ஜ் மையங்கள் , பேடிஎம் , மொபிக்விக் போன்றவற்றின் வாயிலாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.

ஜியோ 10 ஜிபி இலவசம்

மார்ச் 31க்குள் ஜியோ ப்ரைம் மெம்பரில் இணைந்த உடன் ரூ.19 முதல் ரூ.9999 வரையிலான பல்வேறு பிளான்களில் பலதரப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டாலும் ஜியோ ப்ரைம் ரீசார்ஜ் 303 மற்றும் ரூ.499 பிளான்களில் சிறப்பு இலவச டேட்டா வசதி வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 31ந் தேதிக்கு முன்பாக அதாவது இந்த நிதி ஆண்டிலே ரூ. 303 அல்லது ரூ.499 பிளான்களில் ரீசார்ஜ் செய்தால்,

ரூ.303 பிளானில் ரூ.201 மதிப்புள்ள பூஸ்டர் பேக்கில் கிடைக்கின்ற 5ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும்.

ரூ.499 பிளானில் ரூ.301 மதிப்புள்ள பூஸ்டர் பேக்கில் கிடைக்கின்ற 10ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும்.

முதல் பிளானில் கொடுக்கப்பட்டுள்ள தினசரி பயன்பாடான 1ஜிபி டேட்டா காலியான பிறகு இணைய வேகம் குறையாமல் இருக்க 5ஜிபி டேட்டா உதவும். அதே போன்ற தினசரி 2ஜிபி டேட்டா காலியான பிறகு இணைய வேகம் குறையாமல் இருக்க 10ஜிபி டேட்டா உதவும்.

ஜியோ பிரைம் வழங்கும் கடைசி இலவச டேட்டா ஆஃபர் பெறுவது எவ்வாறு ?

இந்த சலுகைகள் பெற மார்ச் 31க்குள் முதல் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதனை மறக்காதீர்கள்….