ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ பிரைம் என்றால் என்ன ? ஜியோ ப்ரைம் பிளான் ஆக்டிவேட் செய்வது பற்றி அவசியம் தெரியவேண்டிய முக்கிய விபரங்களை விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.

 

ஜியோ பிரைம்

170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்து உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையால் பல்வேறு புதிய சாதனைகளை ஜியோ படைத்துள்ளது. இந்திய தொலைதொடர்பு சந்தையை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இலவச சேவையினால் கட்டுப்படுத்தி வரும் ஜியோ இலவச சேவையை வருகின்ற மார்ச் 31, 2017 வரை மட்டும் வழங்குவதனை உறுதி செய்துள்ள நிலையில் புதிய திட்டமாக ஜியோ ப்ரைம் என்ற பெயரில் புதிய மெம்பர்ஷிப் சேவையை தொடங்க உள்ளது.

ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் தகுதி என்ன ?

தற்பொழுது ஜியோ 4ஜி சிம் சேவையை பயன்படுத்தி வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகலாம்.

எவ்வாறு ? 

வருகின்ற மார்ச் 1 முதல் மார்ச் 31 , 2017 வரையிலான காலகட்டத்தில் மைஜியோ ஆப் , ஜியோ இணையதளம் , ரீசார்ஜ் மையங்களின் வழியாக ரூபாய் 99 மதிப்பில் ஜியோ நெம்பருக்கு ரீசார்ஜ் செய்யும்பொழுது ஜியோ பிரைம் மெம்பர் ஆகலாம்.

ஜியோ பிரைம் பிளான் முழுவிபரம்

ரூ.99 கொண்டு ரீசார்ஜ் செய்த பின்னர் ஜியோ ப்ரைம் வாயிலாக நீங்கள் ஏப்ரல் 1 , 2017 முதல் மார்ச் 31 , 2018 வரையிலான ஒரு வருட காலகட்டத்தில் பிரைம் மெம்பராக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் ரூ. 303 கொண்டு மாதந்தோறும் ரீசார்ஜ் செய்தால் தற்பொழுது நடைமுறையில் உள்ள ஹேப்பி நியூ இயர்ஸ் சலுகையை பெறலாம்.

  • ரூ.99 ஜியோ ப்ரைம் மெர்பர்ஷீப் கொண்டு வருடம் முழுவதும் இலவச அழைப்புகளை பெறலாம்.
  • ரூ.303 ரீசார்ஜ் மாதந்தோறும்
  • தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 128 Kbps வேகத்தில் வரம்பற்ற பொதிகள் வழங்கப்படும்.
  • அனைத்து அழைப்புகளும் இலவசம் (ரோமிங் உள்பட)
  • அனைத்து எஸ்எம்எஸ் களும் இலவசம்
  • ஜியோ ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாக 1 வரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஜியோ மூவிஸ்,ஜியோ மேக்ஸ் , ஜியோ டிவி உள்பட அனைத்து ஆப்ஸ்களும்.

அதாவது தினமும் சராசரியாக 10 ரூபாய் கட்டணத்தில் அனைத்து ஜியோ 4ஜி சேவைகளையும் பயன்படுத்தலாம்.

ஜியோ ப்ரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில்

ரூ. 99 கொண்டு மார்ச் 31க்குள் ரீசார்ஜ் செய்ய தவறினால் நீங்கள் ஜியோவின் பிரீபெய்டு அல்லது போஸ்ட்பெய்டு பிளானுக்கு ஏற்ற முறையில் ரீசார்ஜ் செய்யவேண்டி இருக்கும். ஆனால் அனைத்து அழைப்புகளும் இலவசம் (ரோமிங் உள்பட).

 

ஜியோ பிரைம் பிளான் பேக்குகள் கீழ் வரும் சலுகைகள் முழுவிபரம்

ரூ.149 முதல் ரூ.9999 வரையிலான பிளான்கள் வாயிலாக உங்கள் தேவைகேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஜியோ ப்ரைம் பிளான் ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்கள் மொபைலில் மைஜியோ ஆப் அல்லது ஜியோ இணையம் வாயிலாகவோ அல்லது ரீசார்ஜ் மையங்கள் வாயிலாகவோ ரூ.99க்கு ரீசார்ஜ் செய்யுங்கள்..

jio website ⇒ sign in ⇒  select recharge ⇒ jio prime ⇒ Payment

my jio app ⇒ sign in ⇒  select recharge ⇒ jio prime ⇒ Payment

 

தற்பொழுது ஜியோ 4ஜி டேட்டா முதல் மாதம் ரீசார்ஜ் செய்யும்பொழுது கூடுதலாக டேட்டா வழங்க உள்ளது.அதாவது ரூ.303 ப்ரைம் பிளான் கொண்டு ரீசார்ஜ் செய்யும்பொழுது 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்குகின்றது. ரூ.499 ப்ரைம் பேக் பிளானில் 56 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 10ஜிபி டேட்டா வழங்க உள்ளது.

ஜியோ சம்மர் சர்பரைஸ்

பிரைம் திட்டத்தின் கீழ் கால அவகாசம் ஏப்ரல் 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரைம் மற்றும் முதல் ரீசார்ஜ் ஏப்ரல் 15க்குள் செய்தால் அடுத்த மூன்று மாதங்கள் ஜூன் 30ந் தேதி வரை தினமும் 1ஜிபி டேட்டா இலவசமாக அதாவது ஹேப்பி நியூ இயர் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ப்ரைம் மற்றும் முதல் மாத ரீசார்ஜ் 303 அல்லது அதற்கு மேல் உள்ள பிளானில் கட்டணம் செலுத்தினால் மட்டுமே சம்மர் சர்ப்ரைஸ் பெற இயலும். மேலும் ரீசார்ஜ் செய்யும் கட்டணம் ஜூலை மாத பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சம்மர் சர்ப்ரைஸ் ரத்து

டிராய் அமைப்பின் அதிரடி உத்தரவை தொடர்ந்து சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தை கைவிடுவதாக ஜியோ அறிவித்திருந்தாலும் ப்ரைம் மற்றும்முதல் மாத ரீசார்ஜ் ரூபாய் 303 அல்லது அதற்கு மேல் செய்த வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதம் இலவசமாகவே அதாவது ஜூன் மாதம் வரை இந்த சேவை வழங்கப்பட உள்ளது. எனவே உடனடியாக ரீசார்ஜ் செய்தால் இந்த சலுகையை பெறலாம் .. கடந்த ஏப்ரல் 10ந் தேதியுடன் இந்த பிளான் ரத்து செய்யப்பட்டது.

updated :-

ஜியோ தன் தனா தன் பிளான்

புதிய ஜியோ சிம் வாங்குபவர்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் இதுவரை பிரைம் மற்றும் முதல் மாத ரீசார்ஜ் செய்யாதவர்கள் மற்றும் பிரைம் திட்டத்தில் இணைந்து முதல் மாத ரீசார்ஜ் செய்யாதவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சம்மர் சலுகைகளை அல்லது அதற்கு முன்பாக ரீசார்ஜ் செய்த அனைவருக்கும் மூன்று மாதம் இலவசம்…

ஆனால் இனி ரீசார்ஜ் செய்யும் அனைவருக்குமே கட்டண சேவைதான் முதல் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 84 நாட்களுக்கு கட்டணமாக தினமும் 1ஜிபி பயணர்களுக்கு ரூபாய் 309 மற்றம் இரு ஜிபி பயனர்களுக்கு ரூ.509 ஆகும்.

மேலும் இதுபோன்ற ஜியோ 4ஜி தொடர்பான சேவைகளை விரைவாக அறிந்துகொள்ள எமது ஃபேஸ்புக் பக்கத்தை லைக் பன்னுங்க……fb.com/gadgetstamilan

2 COMMENTS

  1. ஜியோ ப்ரைம் நிபந்தனைகள் என்ன ? அன்லிமிடேட் டேட்டா இல்லையா? - கேட்ஜெட்ஸ்

    […] […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here