ஜியோ பிரைம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படும்..?

வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண சேவைக்கு மாறுகின்ற ஜியோ 4ஜி சேவையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ பிரைம் மெம்பர்ஷீப் பிளான் இறுதி ரீசார்ஜ் ஏப்ரல் 30 வரை அதிகரிக்கப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜியோ 4ஜி சேவை

ரூ.99 கட்டணத்தில் பிரைம் மெம்பராக மாற ரீசார்ஜ் செய்து கொள்ளும் பொழுது சாதரன வாடிக்கையாளர்களை விட கூடுதலான டேட்டாவை ஜியோ வாடிக்கையாளர்கள் பெறலாம் என ஆர்ஜியோ அறிவித்துள்ள நிலையில் ஜியோ பிரைம் திட்டத்தில் இதவரை ரீசார்ஜ் செய்தவர்களின் எண்ணிக்கை பற்றி எந்த அதிகார்வப்பூரவ தகவலையும் ஜியோ வெளியிடவில்லை.

10 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ தொலைதொடர்பு நிறுவனம்பல்வேறு இலவச சலுகைகளை கடந்த 6 மாதங்களாக வழங்கி வந்த நிலையில் ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண சேவைக்கு மாறுவது உறுதியாகியுள்ள நிலையில் ரூ.19 முதல் ரூ.9999 வரையிலான பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.

பிரைம் திட்டத்தில் இணைந்தால் அடுத்த ஒரு வருடத்திற்கு அதிக டேட்டா மற்றும் இலவச சலுகைகளை வழங்கிய நிலையில் பெரும்பாலான வாடிக்கையாளர்களை இந்த திட்டம் கவரவில்லை என சில யூக தகவல்கள் தெரிவிக்கப்படுவதனால் இதனை ஏப்ரல் 30 வரை நீட்டிக்கவோஅல்லது இதற்கு மாற்றாக வேறு ஏதேனும் அறிவப்பை ஜியோ வெளியிடும் சாத்தியங்கள் உள்ளது.

காத்திருங்கள் சில நாட்களில் புதிய அறிவிப்பை ஜியோ வெளியிடலாம்.

Recommended For You