ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தவர்கள் எண்ணிக்கை 50 மில்லியன்

100 மில்லியன் பயனர்களுக்கு மேல் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ பிரைம் மெம்பர்ஷீப் திடத்தில் 50 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாக ஜியோ அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஜியோ பிரைம் ரீசார்ஜ்

  • ரூ.99 கட்டணத்தில் ஜியோ ப்ரைம் ரீசார்ஜ் செய்வதால் கூடுதல் டேட்டா பெறலாம்.
  • 50 மில்லியன் சந்தாதாரர்கள் மட்டுமே ப்ரைம் ரீசார்ஜ் செய்துள்ளனர்.
  • ஜியோ இலவச டேட்டா நாளை மட்டுமே கடைசியாகும்.

170 நாட்களில் 100 மில்லியன் பயனர்களை பெற்றதாக அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ உலகின் மிக வேகமாக வளரும் பிராண்டுகளில் ஒன்றாக விளங்குகின்ற இந்த நிறுவனத்தின் வர்த்தகரீதியான சேவை செப்டம்பர் 5 முதல் தொடங்கப்பட்டது.

கடந்த 6 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த இலவச சேவை மார்ச் 31ந் தேதியுடன் நிறைவடைவதனை ஒட்டி ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண சேவைக்கு மாறுவதற்கு முன்பாக ரூ.99 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும்பொழுது அடுத்த மார்ச் 31,2018 வரை ஜியோவின் சிறப்பு சலுகைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

சாதரன வாடிக்கையாளர்களை விட கூடுதல் டேட்டா என அறிவித்திருந்த நிலையில் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் போட்டியை அதிகரிக்கும் நோக்கில் தினம் 1ஜிபி டேட்டா பிளான்களை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஜியோ பிரைம் சப்ஸ்கிரைப் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஜியோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பிரபல பத்திரிக்கை கேள்விக்கு அளித்துள்ள பேட்டியில் 50 மில்லியன் ப்ரைம் சப்ஸ்கிரைப் கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தும் தகவலை வெளியிட்டுள்ளார்.

நாளை மட்டுமே உள்ள நிலையில் மேலும் ரீசார்ஜ் செய்யபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. 10 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிலையில் 5 கோடி பயனர்கள் மட்டுமே பிரைம் உறுப்பினர் திட்டத்தில் இணைந்துள்ளதால் கூடுதலான கால அவகாசத்தை பிரைம் பிளான் ரீசார்ஜ் செய்ய நீட்டிக்கும் வாய்ப்புகள் உள்ளது..

Recommended For You