ஜியோ இலவச 4ஜி சேவையை மார்ச் 31ந் தேதியுடன் நிறைவடைவதனால் ரூ.99 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ ப்ரைம் ரீசார்ஜ் செய்ய நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் ரீசார்ஜ் செய்யலாம்.

ஜியோ ப்ரைம் என்ன செய்யலாம்.? இறுதி நாள்..!

ஜியோ ப்ரைம்

  • ரூ.99 விலையில் ஜியோ ப்ரைம் ரீசார்ஜ் செய்வதனால் ஒரு வருடத்திற்கு கூடுதல் டேட்டா பெறலாம்.
  • நாளை அதாவது மார்ச் 31ந் தேதி மட்டுமே கடைசி நாள் என்பது உறுதியாகியுள்ளது.
  • ஏப்ரல் மாத ரீசார்ஜ் மார்ச் மாதம் செய்தால் கூடுதல் டேட்டா பெறலாம்.

6 மாதங்களாக இலவச சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண சேவைக்கு மாறுவதனால் புதிதாக பிரைம் உறுப்பினர் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ அதில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான டேட்டா சலுகைகள் மற்றும் அதிரடி இலவசங்களை அறிவித்துள்ளது.

குறிப்பாக ரூ.303 ரீசார்ஜ் செய்யும் பொழுது சாதாரன வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுடன் வேலிடிட்டியுடன் 2.5 ஜிபி டேட்டா வழங்குகின்றது. ஆனால் ஜியோ பிரைம் ஆஃபர் வழியாக தினமும் 1ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு 28ஜிபி டேட்டா வழங்குகின்றது. 1ஜிபி டேட்டா காலியான பிறகு 128Kbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்தலாம்.

மற்ற ஜியோ பிரைம் ஆஃபர் பிளான்களில் உள்ள திட்டங்களை கீழுள்ள அட்டவனை படத்தில் காணலாம்…

ஜியோ ப்ரைம் என்ன செய்யலாம்.? இறுதி நாள்..!

ஜியோ ப்ரைம் டேட்டா பிளான்களுக்கு போட்டியாக களமிறங்கியழ மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் ஜியோவுக்கு சவாலாக அமைந்துள்ள நிலையில் 10 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோவில் 5 கோடி வாடிக்கையாளர்கள் பிரைம் திட்டத்துக்கு மாறியுள்ளதாக ஆர்ஜியோ தெரிவித்துள்ளது.

போட்டியாளர்களின் டேட்டா பிளான் விபரங்களுடன் ஜியோ திட்டம் இங்கே ஒப்பீடு செய்யப்பட்டுள்ள படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜியோ ப்ரைம் என்ன செய்யலாம்.? இறுதி நாள்..!

ஜியோ பிரைம் மாதந்திர ரீசார்ஜ் ஆப்ஷனை பிறகு  தேர்ந்தெடுக்கலாம்.ஆனால் ஜியோ பிரைம் ரீசார்ஜ் அவசியம் செய்து கொள்ளுங்கள். போட்டியாளர்களை விட சவாலான விலையில் ஜியோ தனது பிளான்களை வரும் காலத்தில் மாற்றியமைக்கும் வாய்ப்புகளும் உள்ளதால் முதற்கட்டமாக பிரைம் திட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here