ஜியோ ப்ரைம் நிபந்தனைகள் என்ன ? அன்லிமிடேட் டேட்டா இல்லையா?

ஜியோ ப்ரைம் நிபந்தனைகள் என்ன ? இரவில் அன்லிமிடேட் டேட்டா இல்லையா ? மேலும் ஒரே சமயத்தில் ஒரு கருவியை மட்டுமே ஹாட்ஸ்பாட் வழியாக பயன்படுத்த இயலுமா ? ஜியோ ப்ரைம் டெர்ம்ஸ் & கன்டிஷன் T(&C) என்ன அறிவோம் வாருங்கள்..

ஜியோ ப்ரைம்

இந்திய 4ஜி சேவையில் புதிய பரட்சியை மேற்கொண்டுள்ள ஜியோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ப்ரைம் என்ற பெயரில் ரூ.99 கட்டணத்தில் புதிய மெம்பர்ஷீப் திட்டத்தை மார்ச் 31 , 2018 வரை வழங்கியுள்ளது.இந்த ஜியோ பிரைம் குறித்தான நிபந்தனைகள் வெளியாகியுள்ளது.

ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்து கொண்டால் கூடுதல் டேட்டா என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறுபயன்படுத்தப்படும்பொழுது ஒரே சமயத்தில் 10க்கு மேற்பட்ட ஹாட்ஸ்பாட் அல்லது டெத்திரிங் வழியாக இணையத்தை பகிர்ந்து கொள்வதனால் அதிகம் டேட்டா பயன்படுத்துப்படுவதனை தடுக்கும் வகையில் ஒரு கருவியை மட்டுமே ஹாட்ஸ்பாட் வழியாக பயன்படுத்த இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது ஹேப்பி நியூ இயர்ஸ் சலுகையில்வழங்கப்பட்டு வரும் இரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான இலவச அன்லிமிட்டேட் டேட்டா இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மார்ச் 31 ,2017 வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் வெளியான 1000 நிமிடங்கள் மட்டுமே இலவசம் என்பதனை ஜியோ திட்டவட்டமாக மறுத்துள்ளது. அனைத்து அழைப்புகளும் முற்றிலும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க –ஜியோ பிரைம் என்றால் என்ன ?

ஜியோ ப்ரைம் பிளான் பேக் முழுவிபரம்

 

Recommended For You