மகளிர் தினத்தில் ஜியோ ப்ரைம் பரிசாக வழங்குவது எப்படி ?

ஜியோ சேவையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ ப்ரைம் மெம்பர்ஷீப் திட்டத்தில் ரூ.99 கட்டணமாக செலுத்தி இணைவதனால் அதிகப்படியான டேட்டா மற்றும் பல்வேறு சிறப்பு சலுகைகளை ஜியோ 4ஜி சேவையில் பெறலாம்.

ஜியோ ப்ரைம் பரிசு

ஜியோ ப்ரைம் திட்டத்தின் இணைவதனால் கூடுதலாக டேட்டா வழங்குவதுடன் பல்வேறு விதமான ஜியோ நிறுவன ஆப்ஸ்களான ஜியோ டிவி , ஜியோ மேக்சின் உள்பட பலவற்றை இலவசமாக பெறலாம்.சர்வதேச மகளிர் தினத்தில்  உங்கள் விருப்பமான பெண்களுக்கு எவ்வாறு பரிசாக வழங்குவது என அறிந்து கொள்ளலாம்.

முதலில் மை ஜியோ ஆப் , ஜியோ இணையதளம் வாயிலாக சென்று ரீசார்ஜ் செய்யலாம்.

  1. முதலில் MyJio ஆப் வாயிலாக ஆண்ட்ராய்டு அல்லது iOS மொபைலில் சென்று
  2. 3 கோடுகள் போல உள்ள பாரினை க்ளிக் பன்னுங்க
  3. அதில் ஜியோ ப்ரைம் (Jio Prime) என்ற தேர்வு இருக்கும்
  4.  Jio Prime தேர்ந்தெடுத்த பின்னர் Gift jio prime ஆப்ஷனை பெற்றுள்ளது.
  5. அதன் பிறகு நீங்கள் பரிசாக வழங்கும் எண்ணை பதிவு செய்த பின்னர்
  6. உங்களின் பேமென்ட் தேர்வு செய்து பரிசாக வழங்குகள்.

 

மேலும் இந்த மாத இறுதிக்குள் ரூபாய் 303 அல்லது ரூபாய் 499 பிளானில் ரீசார்ஜ் செய்யும்பொழுது கூடுதலான டேட்டாவை பெறலாம்.

Recommended For You