ஜியோ ப்ரைம் உறுப்பினர் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வரும் ஜியோ தற்பொழுது பை ஒன் கெட் ஒன் ஆஃபரும் (Jio Buy One Get One Offer) வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 10ஜிபி டேட்டா கூடுதலாக பெறலாம்.
ஜியோ ப்ரைம் : ஜியோ பூஸ்டர்பேக்
வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண சேவைக்கு மாற உள்ள ஜியோ 4ஜி சேவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரைம் மெம்பர்ஷீப் திட்டத்தில் ரூ.99 கொண்டு ரீசார்ஜ் செய்யும் பொழுது அடுத்த வருடம் அதாவது மார்ச் 31 , 2018 வரை சிறப்பு சலுகை விலையில் டேட்டா பெறலாம்.
சாதரன வாடிக்கையாளர்களை ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டா இதன் மூலம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேக்கில் மேலும் ஒரு சலுகையாக மார்ச் 31 ,2017 க்குள் ப்ரைம் ரீசார்ஜ் செய்வதுடன் அடுத்த ஏப்ரல் மாத டேட்டா கட்டணமாக ரூ.303 அல்லது ரூ.499 பிளானில் ரீசார்ஜ் செய்து கொண்டால் கூடுதலாக ஜியோ பூஸ்டர் பேக் சலுகைகளை முதல் மாதம் இலவசமாக அதாவது ஏப்ரல் மாதம் இலவசமாக பெறலாம்.
அதாவது ரூ.303 திட்டத்தில் உள்ள தினமும் 1ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு பிறகு 128Kbps வேகத்தில் கிடைக்கும் டேட்டாவுக்கு பதிலாக சராசரிய வேகத்திலே கிடைக்கும். அதே போன்றே ரூ.499 திட்டத்தில் உள்ள தினசரி பயன்பாட்டிற்கான 2ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு பிறகு 128Kbps வேகத்தில் இயங்காமல் சராசரி வேகத்திலே இயங்குவதற்கு ஜியோ பூஸ்டர்பேக் வழி வகுக்கின்றது.
ஜியோ பூஸ்டர்பேக் பிளான் விபரம்