ஜியோ வாடிக்கையாளர்கள் தகவல்கள் லீக் உண்மையல்ல்..!

இந்தியாவின் முன்னணி 4ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தகவல்கள் வெளியானதாக வந்த விபரத்தை ஜியோ முற்றிலும் நிராகரித்துள்ளது.

ஜியோ ஹைக்கிங்

12 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஜியோ நிறுவனத்தின் ஆதார் அடிப்படையிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இதனை முற்றிலுமாக ஜியோ மறுத்து இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வாடிக்கையாளர்களின் தகவல்கள், உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சட்டத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம் மேலும் இதுதொடர்பான விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியள்ளது.

4ஜி சேவையில் புரட்சி செய்து வரும் ஜியோ நிறுவனத்தின் பயனாளர்கள் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், magicapk.com என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை பகிர்ந்தால் வாடிக்கையாளரின் பெயர், மெயில் ஐ.டி, மொபைல் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண், வாடிக்கையாளரின் வட்டம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில். இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தரவு மீறலாக இருக்கும் என கருதப்படுகின்றது.

தகவல்கள் லீக்கானதாக சொல்லப்படுகின்ற இணையதளம் தற்போது முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

Recommended For You