உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ஜியோ தற்பொழுது 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. ஜியோ 4ஜி பிளான் கட்டண விபரம் இதோ…
ஜியோ 4ஜி பிளான்
ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும்.
மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிக்குள் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையலாம்.
இந்த திட்டத்தில் இணைந்தவர்கள், ரூ.303ல் தற்போது பெற்றிருக்கும் அனைத்து சலுகைகளையும் அடுத்த 12 மாதங்களுக்கு அதாவது மார்ச் 31ம் தேதி 2018ம் ஆண்டு வரை பெறலாம் என்று அறிவித்தார்.