ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி மொபைல் சேவை நிறுவனம் தான் உலகின் மிகப்பெரிய முதலீட்டினை கொண்டு தொடங்கப்பட்டுள்ள நிறுவனம் என முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.

தற்பொழுது ஜியோ நிறுவனம் சோதனை ஓட்டத்தில் உள்ள நிலையிலே 7 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டுள்ள ஜியோ 4 ஜி நிறுவனம் 13 மில்லியன் ஜிபி அதாவது 13PB  (Peta Bytes) டேட்டாவினை மாதம் அளவில் முதல் `வருட  காலண்டில் பயன்படுத்தியுள்ளது. மேலும் சராசரியாக ஒரு வாடிக்கையாளர் 18.5 ஜிபி டேட்டாவினை பயன்படுத்தியுள்ளார்.

முதலிடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனம் 55 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு 45PB டேட்டாவினை பயன்படுத்தியுள்ளது.அதனை தொடர்ந்து வோடோஃபோன் நிறுவனம்  47 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு 45PB டேட்டாவினை பயன்படுத்தியுள்ளது.

சராசரியாக ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் மாதம் 0.81 ஜிபி டேட்டாவும் , வோடோஃபோன் வாடிக்கையாளர் மாதம் 0.59 ஜிபி டேட்டாவினை பயன்படுத்தியுள்ளன. ஆனால் ஜியோ வாடிக்கையாளர் மாதம் 18.5 ஜிபி டேட்டாவினை பயன்படுத்தியுள்ளார்.

கடந்த முதல் காலண்டில் இந்தியாவின் மொத்தமாக உள்ள 278 மில்லியன் டேட்டா பயனாளர்களின் மொத்த டேட்டா செலவு 202PB ஆகும். இதில் ஒரு வாடிக்கையாளரின் 0.72ஜிபி மட்டும்.

மேலும் படிக்க ; ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டா வசதி

முழுமையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த சில (செப்டம்பர்) மாதங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் தொடக்கநிலை பீட்டா சேவையிலே புதிய சாதனையை படைத்துள்ளது. மற்ற 4 ஜி சேவை நிறுவனங்களை ஒப்பீடுகையில் ரிலையன்ஸ் ஜியோ சேவை மிக வேகமானதாக உள்ளது.