ஜியோ 4ஜிக்கு போர்ட் செய்தால் லாபாமா ? நஷ்டமா ? – ஜியோ ப்ரைம்

ரிலையன்ஸ் ஜியோ புரட்சியின் காரணமாக பல்வேறு மாற்றங்களை சந்தித்து வரும் இந்திய தொலைதொடர்பு துறையில் மற்றொரு முக்கிய அம்சாமாக வந்துள்ள ஜியோ ப்ரைம் சேவையை தொடர்ந்து உங்கள் நெம்பரை மாற்றாமல் ஜியோவுக்கு போர்ட் செய்தால் லாபமா ? நஷ்டமா ? வாருங்கள்.. அறிந்து கொள்ளலாம்.

ஜியோ போர்ட்

100 மில்லியன் வாடிக்கையாளர்கள் 170 நாட்கள் , உலகின் மிக வேகமாக வளரும் ஜியோ பிராண்டு என பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள ஜியோவின் இலவச சேவை மார்ச் 31 ,2017 முதல் நிறைவடைவதனால் புதிதாக மெம்பர்ஷீப்பிளான் ஒன்றை ஆர்ஜியோ அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜியோ ப்ரைம் நண்மைகள்

ரூ.99 கொண்டு ரீசார்ஜ் செய்த பின்னர் ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் வாயிலாக நீங்கள் ஏப்ரல் 1 , 2017 முதல் மார்ச் 31 , 2018 வரையிலான ஒரு வருட காலகட்டத்தில் பிரைம் மெம்பராக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் ரூ. 303 கொண்டு மாதந்தோறும் ரீசார்ஜ் செய்தால் தற்பொழுது நடைமுறையில் உள்ள ஹேப்பி நியூ இயர்ஸ் சலுகையை பெறலாம்.

 • ரூ.99 ஜியோ ப்ரைம் மெர்பர்ஷீப் கொண்டு வருடம் முழுவதும் இலவச அழைப்புகளை பெறலாம்.
 • ரூ.303 ரீசார்ஜ் மாதந்தோறும்
 • தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 128 Kbps வேகத்தில் வரம்பற்ற பொதிகள் வழங்கப்படும்.
 • அனைத்து அழைப்புகளும் இலவசம் (ரோமிங் உள்பட)
 • அனைத்து எஸ்எம்எஸ் களும் இலவசம்
 • ஜியோ ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாக 1 வரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோவுக்கு போர்ட் செய்யலாம்

நீங்கள் ஏர்டெல் ,வோடோஃபோன் , பிஎஸ்என்எல் , ஏர்செல் , ஐடியா போன்ற எந்தவொரு சேவையிலும் இருந்து ஜியோவுக்கு போர்டெபிலிட்டி வாயிலாக எண்ணை மாற்றாமல் சேவைக்கு மாறலாம்.

எந்த நிறுவனமும் தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா அதாவது மாதம் 30ஜிபி டேட்டா மேலும் கூடுதலாக 128 Kbps வேகத்தில் வரம்பற்ற பொதிகளை வழங்க வாய்ப்பில்லை.ஆனால் பலதரப்பட்ட புதிய சலுகைகளை அடுத்த வார மத்தியில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. ஜியோவுக்கு நீங்கள் போர்ட் செய்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள ப்ரைம் சேவையில் பலன்களை ஒரு வருடத்திற்கு பெறலாம.

ஜியோ போர்ட்

 • உங்கள் மொபைல் எண்ணிலிருந்து ‘PORT’ என எழுதிய மொபைல் நெம்பருடன் 1900 என்ற எண்ணுக்கு மேசேஜ் பன்னுங்க.  (எ.கா) PORT 98xxxxxx00′ to 1900
 • உங்களுக்கு UPC கோடு (Unique Portability Code) கிடைக்கும்.
 • கூகுள் பிளே அல்லது ஆப்ஸ்டோர் வழியாக ‘My Jio’ ஆப்ஸை தரவிறக்கி பார் கோடினை உருவாக்குங்கள்.
 • உங்கள் அருகாமையில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் அங்காடி அல்லது அங்கீகாரம் பெற்ற ஜியோ சேவை வழங்குபவர்களின் வாயிலாக உங்கள் ஆதார் (eKYC) மூலம் அடையாளத்தை சமர்ப்பியுங்கள்.
 • சில நாட்களுக்கு பிறகு உங்கள் முந்தைய சேவை நிறுவனத்தில் இருந்து விடை பெற்று ஜியோ சேவைக்கு மாறலாம்.

தற்பொழுது சற்றே சிந்தியுங்கள்…ஜியோ ப்ரைம் லாபாமா ? நஷ்டமா ? உங்கள் கருத்தினை பதிவு செய்யுங்கள்…இது போன்ற செய்திகளை தொடர்ந்து வாசிக்க – gadgetstamilan

Recommended For You