இந்தியா தொலைதொடர்பு வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி வருகின்ற ஜியோ 4ஜி பெயரில் பல்வேறு விதமான மோசடி மற்றும் போலியான தகவல்களை கொண்ட செயல்படுகின்ற பல்வேறு இணையதளங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோ 4ஜி 10 ஜிபி இலவச டேட்டா வசதியா ?

ஜியோ 4ஜி

ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படும் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் தனது சேவையை செப்டம்பர் 5, 2016 முதல் வழங்கி வருகின்றத்.வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கியில் வரையறையற்ற அழைப்புகள் ,எஸ்எம்எஸ் டேட்டா போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகின்றது.

வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் வழங்கப்பட்ட சலுகைகள் டிசம் 31 ,2016யில் நிறைவடைந்ததை ஒட்டி அடுத்து வழங்கப்பட்டுள்ள ஹேப்பி நியூ இயர் சலுகையிலும் வரையறையற்ற அழைப்புகள் எஸ்எம்எஸ் மற்றும் வரையறையற்ற டேடாவினை வழங்கி வருகின்றது. மேலும் வருகின்ற ஜூன் 30 ,2017 வரை மிக குறைந்த கட்டண விகிதத்தில் டேட்டாவை வழங்க ஜியோ திட்டமிட்டிள்ளதாக முன்பே பதிவிட்டிருந்தோம்.

ஜியோவின்சேவையில் 4ஜி  தற்பொழுது உள்ள சலுகை விபரம் இது மட்டுமே… 1 ஜிபி அன்லிமிடேட் டேட்டா அதற்கு மேல் 128Kbps வேகத்தில் மட்டுமே கிடைக்கும்.

ஜியோ 4ஜி 10 ஜிபி இலவச டேட்டா வசதியா ?

டேட்டா போலிகள்

பல்வேறு மோசடி இணையதளங்கள் மற்றும் ஆன்லைனில் வெளியாகும் பல்வேறு விபரங்கள் பெரும்பாலும் போலி தகவல்களே ஆகும். 10ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக (போலிதளம்- upgrade-jio4g.ml) உங்களுடைய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற விபரங்களை கேட்கின்றது.

மேலும் இணைய வேகத்தை அதிகரிக்க இந்த செயலியை முயற்சி செய்யுங்கள் , இந்த தளத்தில் பதிவு செய்யுங்கள் என சொல்லும் அனைத்துமே போலியான மற்றும் உங்கள் மொபைலுக்கு மிகுந்த ஆபத்தைஏற்படுத்தும் வகையிலான தேவையற்ற செயலிகளை நிறுவுவதனால் உங்கள் பெர்சனல் தகவல்கள் , வங்கி கணக்கு விபரங்கள் போன்வற்றை களவாட வாய்ப்புகள் உள்ளது எனவே எக்காரணம் கொண்டும் அதிகார்வப்பூர்வமற்ற எந்த இணையத்திலும் உங்கள் தகவல்களை பரிமாறதீர்கள்.

ஜியோ நிறுவனத்தின்அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே எந்த அறிவிப்பும் டேட்டா விபரங்களும் வெளியாகும். மேலும் எங்களை போன்ற செய்தி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் வெளியாகும் தகவலை மட்டுமே கருத்தில் கொள்ளவும்…

தொடர்ந்து இணைந்திருங்கள்… கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்துடன்……….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here