ஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடி திட்டமாக அமைய உள்ள ஜியோ LYF 4ஜி VoLTE மொபைல் பற்றிய நுட்பவிபரங்கள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ளது.

ஜியோ LYF 4ஜி VoLTE மொபைல்

ரூ. 500 முதல் ரூ.1500 விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஜியோ 4ஜி ஃபீச்சர் மொபைல் போன் முழுநுட்ப விபரங்களை டெக்பிபி தளம் வெளியிட்டுள்ளது.

டிஸ்பிளே

2.4 அங்குல் டிஸ்பிளே பெற்றதாக மிக நேர்த்தியாக ஃபினிஷ் செய்யப்பட்ட கவரினை கொண்டதாக டி9 கீபோர்டு பெற்றதாக வரவுள்ளது.

பிராசஸர் & ரேம்

இந்த மொபைலில் கைஓஎஸ் மூலம் இயக்கப்பட்டு ஸ்னாப்டிராகன் 202 அல்லது மீடியாடெக் பிராசஸருடன் கூடிய 512எம்பி ரேம் பெற்றதாக 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுன் கூடுதலாக சேமிப்பை அதிகரிக்க 64ஜிபி வரையில் மைக்ரோஎஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

கேமரா

இந்த துறையில் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா பெற்றதாகவும், முன்புறத்தில் VGA கேமராவால் இயக்கப்படுகின்றது.

பேட்டரி

இந்த ஜியோ 4ஜி வோல்ட்இ மொபைல் 2300mAh பேட்டரி வாயிலாக இயக்கப்பட்டு இருநாட்களை வரை தாக்குபிடிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

சிறப்பம்சங்கள்

குறிப்பாக இந்த மொபைலில் இருசிம் கார்டுகள் பயன்படுத்தலாம், அதில் ஒன்று நிச்சயமாக 4ஜி ஜியோ சிம் மற்றொன்று 2ஜி சிம் ஒன்றையும் பயன்படுத்தலாம். மேலும் வை-ஃபை ஹாட்ஸ்பாட், புளூடுத், ஜிபிஎஸ்என பல்வேறு அம்சங்களுடன் தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் 22 மொழிகளில்  பயன்படுத்தலாம்.

மேலும் ஜியோ ஆப்ஸ்கள், ஃபேஸ்புக் போன்ற அடிகப்படையான சில செயலிகளும் ப்ரீலோட் செய்யப்பட்டிருக்கின்றது.

விலை

இந்த மொபைல் விலை ரூ. 1499 க்கு விற்பனை செய்யப்படலாம். வருகின்ற 21ந் தேதி முக்கிய விபரங்கள் வெளியாகும்.

படங்கள் உதவி – Techpp