ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகை வழங்கப்படுவதனை நிறுத்தக்கோரி டிராய் அமைப்பு உத்திரவிட்டதற்கு எதிராக புகார் மனு ஒன்றை change.org வழியாக அனுப்பு வகையில் உருவாக்கியுள்ளனர்.

டிராய்க்கு எதிராக மனு அனுப்பலாம் : ஜியோ தடை

 ஜியோ தடை

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் ஜியோ அறிவித்திருந்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகளுக்கு அதிரடியாக தடை விதித்ததை தொடர்ந்து போன்ரேடார் பிளாக் நிறுவனர் அமித் பவானி , பிரதமர் மோடி மற்றும் தொலை தொடர்புதுறை அமைச்சர் மனோஜ் சின்காவுக்கு அளித்துள்ள மனுவில்,

டிராய்  உத்தரவு டிஜிட்டல் இந்தியாவின் கறுப்பு நாள் என தொடங்குகின்ற இந்த மனுவில் அனைவருக்கும் இணையம் என்ற நோக்கில் 1ஜிபி டேட்டாவுக்கு ஐந்து ரூபாய் என கட்டணத்தில் வழங்கப்படுகின்ற  ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு தடையாக டிராய் அமைப்பு செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டிராய்க்கு எதிராக மனு அனுப்பலாம் : ஜியோ தடை

ஒரு காலத்தில் ஒரு ஜிபி டேட்டா 250 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட நிலை மாறி ஒரு ஜிபி டேட்டா ரூபாய் 10 என வந்துள்ள நிலையில் இவ்வளவு பெரிய மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது ? இதற்கு முன்பு வரை தொலை தொடர்பு நிறுவனங்கள்  இந்திய நுகர்வோர்களை முட்டாளாக்கி இருந்தார்களா ? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நுகர்வோர் சார்ந்த நலனுக்கு செயல்படுகின்ற டிராய் அமைப்பின் இந்த முடிவு மிகவும் எமாற்றத்தை அளிப்பதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு தற்பொழுது வரை 85,340 நபர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.. இந்த மனுவுக்கு 1,50,000 நபர்கள் கையெழுத்துயிட வேண்டும் என்பது குறிப்பிடதக்கதாகும்.

அனுப்ப வேண்டிய முகவரி ; https://www.change.org/p/internetforall-trai-we-the-indian-youth-need-affordable-internet-access

டிராய்க்கு எதிராக மனு அனுப்பலாம் : ஜியோ தடை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here