ஆர்ஜியோ நிறுவனம் அறிமுகம் ஜியோ பிரைம் மெம்பர்ஷீப் திட்டத்தில் ரூ.99 கட்டணமாக செலுத்தி பிரைம் மெம்பராகிவிட்டால் கூடுதல் டேட்டா உள்பட பல சலுகைகளை பெறலாம் தற்பொழுது ஜியோ எண்ணுக்கு பேடிஎம் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யலாம்.
பேடிஎம்-ல் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தால் ரூ.381 மதிப்புள்ள சலுகைகள்

 

பேடிஎம் ஜியோ பிரைம்

ரீசார்ஜ் சேவை  உள்பட பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வரும் பேடிஎம் வாயிலாக ரீசார்ஜ் செய்தால் ரூ.381 மதிப்புள்ள சலுகைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை பெற பேடிஎம் தளத்திலோ அல்லது ஆப் வாயிலாக ரீசார்ஜ் செய்யும் பொழுது  PAYTMJIO  என்ற ப்ரோமோ கோடினை பயன்படுத்தினால் ரூ.30 உடனடி கேஸ்பேக் சலுகையாக இரண்டு முறையும், படங்களுக்கான டிக்கெட் வாங்கும்பொழுது அதிகபட்சமாக ரூ.150 வரை  MOVIE4JIO என்ற ப்ரோமோ கோடினை பயன்படுத்தினால்கிடைக்கும்.

பேடிஎம்-ல் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தால் ரூ.381 மதிப்புள்ள சலுகைகள்

ஜியோ பிரைம்

ரூ.99 கொண்டு ரீசார்ஜ் ஜியோ எண்ணுக்கு ரீசார்ஜ் செய்த பின்னர் ஜியோ ப்ரைம் வாயிலாக நீங்கள் ஏப்ரல் 1 , 2017 முதல் மார்ச் 31 , 2018 வரையிலான ஒரு வருட காலகட்டத்தில் பிரைம் மெம்பராக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் ரூ. 303 கொண்டு மாதந்தோறும் ரீசார்ஜ் செய்தால் தற்பொழுது நடைமுறையில் உள்ள ஹேப்பி நியூ இயர்ஸ் சலுகையை பெறலாம். மேலும் ரூ. 499 கட்டணத்தில் தினமும் 2ஜிபி டேட்டா பெறலாம்.

மேலும் படிக்க – ஜியோ பிரைம் முழுவிபரம் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here