மாதந்திர டிராய ஸ்பீடு டெஸ்ட் சோதனையில் ஜியோ தொடர்ந்து 4ஜி வேகத்தில் 18.809Mbps என அதிகபட்சமாக பதிவு செய்து முன்னிலை வகிக்கின்றது.

மிக வேகமான நெட்வொர்க் ஜியோ , மோசமான நெட்வொர்க் ஏர்டெல் - டிராய்

வேகமான நெட்வொர்க் ஜியோ

லட்சகணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகின்ற இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆனையத்தின் மை ஸ்பீடு ஆப் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் மே மாதத்திற்கான அதிகபட்ச தரவிறக்க வேகத்தை பெற்ற எல்டிஇ சேவை வழங்கும் நிறுவனமாக ஜியோ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக வேகமான நெட்வொர்க் ஜியோ , மோசமான நெட்வொர்க் ஏர்டெல் - டிராய்

தரவிறக்க வேகத்தில் ஜியோ அதிகபட்சமாக நொடிக்கு 18.809 எம்பி வரை பதிவு செய்துள்ளது, இதனை தொடர்ந்து வோடஃபோன் நொடிக்கு 12.297 எம்பி என்ற அளவிலும், ஐடியா தரவிறக்க வேகத்தில் நொடிக்கு 11.685 எம்பி பதிவு செய்துள்ளது. மிக குறைந்த தரவிறக்க வேகமாக ஏர்டெல் நிறுவனம் 8.24 Mbps மட்டுமே பதிவு செய்துள்ளது.

பெஸ்ட் 3ஜி நெட்வொர்க்

3ஜி சேவையை வழங்கும் வோடஃபோன், ஏர்டெல், பிஎஸ்என்எல் ,ஏர்செல் ஐடியா, எம்டிஎஸ் மற்றும் ஆர்காம் போன்ற நிறுவனங்களில் தரவிறக்க வேகத்தில் வோடஃபோன் அதிகபட்சமாக 5.65 Mbps வேகத்தை பதிவு செய்துள்ளது.

மிக வேகமான நெட்வொர்க் ஜியோ , மோசமான நெட்வொர்க் ஏர்டெல் - டிராய்

மற்ற நிறுவனங்களில் ஐடியா 3.59 Mbps , ஏர்டெல் 3.37 Mbps, ஏர்செல் 2.36 Mbps மற்றும் பிஎஸ்என்எல் 1.59 Mbps என முறையே வேகத்தை பெற்றுள்ளன.