ரிலையன்ஸ் ஜியோபோன் விலை இலவசம்

ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றதை தொடர்ந்து பல்வேறு முக்கிய விபரங்களை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கிய 40வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் அம்பானி வெளியிட்ட முக்கிய விபரங்கள்..!

1977 ஆம் ஆண்டில் 70 கோடியாக இருந்த ரிலையன்ஸ் சொத்து மதிப்பு இன்றைக்கு 4700 மடங்கு உயர்ந்து ரூ.3,30,000 லட்சம் கோடியாக உள்ளது.

மொத்த வருமானம் இதே காலத்தில் ரூபாய் 3 கோடியிலிருந்து தற்போது ரூ.3000 கோடியாக உயர்ந்துள்ளது.

1977 ஆம் ஆண்டு ரூ. 1000 ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு 1600 மடங்கு உயர்ந்து ரூ. 16,54,503 ஆக உள்ளது.

உலகின் மிக வேகமாக எந்தவொரு டெக்னாலாஜி நிறுவனமும் வளர்நதிராத வகையில் ஜியோ வளர்ச்சி பெற்றுள்ளதிற்கு ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு நன்றியை முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

எந்தவொரு நிறுவனமும் வழங்காத வகையில் இந்தியா முழுவதும் இலவச அழைப்புகளை வோல்ட்இ நுட்பத்தின் வாயிலாக வழங்குகின்றது.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு நன்றி தெரிவித்த அம்பானி தினமும் 250 கோடி அழைப்புகளை ஜியோ பயனர்கள் மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக 20 ஜிபி கோடி என்றிருந்த டேட்டா பயன்பாடு தற்போது 200 கோடி ஜிபி டேட்டா என உயர்ந்துள்ளது.

ஜியோ வருகைக்கு முன்னர் 155 வது இடத்தில் மொபைல் இணைய பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இருந்த இந்தியா தற்போது சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது.

10 கோடி அதாவது 100 மில்லியன் பயனர்கள் ஜியோ கட்டண சேவைக்கு மாறியுள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் ரூ.309 திட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட பிளானை தேர்ந்தெடுத்துள்ளனர்..!

எங்களது போட்டியாளர்கள் 25 வருடமாக 2ஜி சேவையை கட்டுமானத்தை மேற்கொண்ட நிலையில் மூன்றே வருடங்களில் 4ஜி சேவையை ஜியோ உருவாக்கியுள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார்.

50 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள் பீச்சர் மொபைல்களை அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள், இவர்களுக்கு ரூ. 3000 முதல் ரூ. 4,500 விலையில் உள்ள மொபைல்கள் எதுவாக இல்லை.

எனவே இவர்களுக்கு ஏற்ற வகையில் டி9 கீபோர்டு மனற்றும் எஃப்எம் ரோடியோ போன்றவற்றை பெற்ற ஃபீச்சர் போன்கள் வெளியிடப்பட உள்ளது.

4G LTE ஆதரவுடன் கூடிய இந்த மொபைல்கள் 22 இந்திய மொழிகள் உட்பட மைக்ரோ எஸ்டி மற்றும் குரல் வழி உத்தரவுக்கு கீழ் படியும் வகையில் இருக்கும்.

இந்த மொபைலில் நீங்கள் குரல் வழியாக கேட்கும் கேள்விகளுக்கும் பதில் வழங்கும், அதாவது அலெக்ஸா , சிரி, பிக்ஸ்பீ, கூகுள் அசிஸ்ட் போன்ற செயல்பாட்டை பெற்றிருக்கும்.

ஜியோ ஆப்ஸ்கள்,ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்துசெயலிகளும் இடம்பெற்றிருக்கும்.

ஜியோபோன் வழியாக எண் 5 அழுத்தி பிடித்தால் உங்களுக்கு ஆபத்து உள்ளதை உங்கள் விருப்பமான பதிவு செய்யப்பட்ட நண்பரின் எண்ணுக்கு அவசர தேவை என்ற செய்தியை வழங்கும்.

ஜியோபோன் வாயிலாக நாமோஆப், தானாகவே அப்டேட் ஆகும் வகையிலான மென்பொருள் ,  NFC ஆதரவினை பெற்றிருகும்.

ரூ.153 கட்டணத்தில் வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வழங்கப்பபடும்.

ஜியோபோன் வாயிலாக டிவியை இணைக்கும் வகையில் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் புதிய ரூ. 309 கட்டணத்தில் ஜியோபோனை டிவியில் இணைக்கலாம்.

வாரத்திற்கு 24 மட்டும்ரூ.54 கட்டணத்தில் ஜியோபோன் டேட்டா பிளான் இருக்கும்.

ஜியோபோன் என்ற பெயரில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கான ஜியோ போன் விலை 0 மட்டுமே.. ரூ. 1500 இருப்புதொகை செலுத்த வேண்டும் மூன்று வருடங்களுக்கு பிறகு வழங்கப்படும்.

வரும் ஆகஸ்ட் 15 முதல் இந்த போன் கிடைக்க உள்ளது. ஆகஸ்ட் 24 முன்பதிவு தொடங்கப்படும் வாரம் 50 லட்சம் மொபைல்கள் விற்பனை செய்யப்படும்.

மேலும் படிங்க — > ஜியோபோன் வாங்குவது எப்படி ?

 

Recommended For You