ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மூன்று மாதம் இலவச இன்டர்நெட் டேட்டா ,அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்கும் அனைவருக்கும் 3 மாதம் இலவச டேட்டா

முதலில் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் , பின்பு லைஃப் மொபைல் பிராண்டு , சாம்சங் ,எல்ஜி என தொடர்ச்சியாக தற்பொழுது 4ஜி மொபைல் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக 3 மாத இலவச 4ஜி இன்டர்நெட் டேட்டா ,அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோ ஆப்ஸ் தரவிறக்கம் செய்யாமல் அருகில் உள்ள ரீடெயில் கடைகளை அனுகினாலே புதிய ஜியோ சிம் பெற்று மூன்று மாத இலவச டேட்டாவை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lyf  ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்மொபைல்கள் ரூ.3,999 முதல் ரூ.19,499 விலை வரை சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஆன்லைன் மட்டுமல்லாமல் ரிலையன்ஸ் டிஜிட்டல் , ரிலையன்ஸ் எக்ஸ்பிரஸ் மேலும் முன்னனி சில்லறை வணிக கடைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு உங்கள் அருகாமையில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது ஜியோ சிம் மையங்களை அனுகுங்கள். உங்களிடம் 4ஜி மொபைல் மட்டும் இருந்தாலே போதும் ஜியோ சேவையை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here