ரிலையன்ஸ் குழுமத்தின் லைஃப் பிராண்டில் விற்பனை செய்யபடுகின்ற ஜியோஃபை கருவியின் மூலம் ஜியோஜிஎஸ்டி ஸ்டார்ட்ர் கிட் சேவையை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ ஜிஎஸ்டி ஸ்டார்ட்ர் கிட்
வணிகத்தில் ஈடுபட்டு வரும் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வணிகம் செய்யக் கூடிய வகையிலான மென்பொருள் தீர்வினை வழங்கும் ஜிஎஸ்டி சுவிதா சேவைக்கு அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களில் ஜியோ ஜிஎஸ்டி நிறுவனமும் ஒன்றாகும்.
நாட்டின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக சேவையை வழங்கி வருகின்ற ஜியோ பிராண்டில் தொடங்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி தீர்வுக்கான மென்பொருளை ஒரு வருடத்திற்கு ஆரம்ப கட்டமாக இலவசமாக வழங்குகின்றது.
இதனைபெற ஜியோஃபை கருவியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோஜிஎஸ்டி பேக் வாயிலாக பெறலாம்.இந்த கருவியின் விலை ரூ.1999 ஆகும்.
ஜியோ ஜிஎஸ்டி ஸ்டார்ட்ர் கிட் சிறப்புகள்
1.ஒரு வருடத்திற்கு இலவச ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள்
2. வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு வருடத்திற்கு 24ஜிபி தரவு
3. ஜியோஃபை சாதனம்
4. பில்லிங் செயலி மற்றும் பல
5. ஆயிரத்துக்கு மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு வரி கோடுகள் இணைக்கப்பட்டுள்ளது.
6. தினசரி ஜிஎஸ்டி விதிப்பு பில் விபரம் போன்றவற்றுடன் அருகாமையில் உள்ள சிறந்த ஆடிட்டர் போன்றவற்றை அறிய உதவுகின்றது.