இந்திய தொலைத்தொடர்பு வட்டங்களில் 4ஜி டேட்டா சேவை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. நாட்டின் மொத்த 4ஜி டேட்டா பயன்பாட்டில் 42 சதவீத  பங்களிப்பினை ஜியோ பெற்றுள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 4ஜி : ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவையை கடந்த செப்டம்பரில் தொடங்கி வருகின்ற மார்ச் 31 ,2017 வரை வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் போன்றவற்றில் இலவச டேட்டா சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகள் , எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்கள் வழங்கப்படுகின்றது. மேலும் சமீபத்தில் நாம் வெளியிட்டிருந்த செய்தியின் அடிப்படையில் இலவச 4ஜி அல்லாமல் ரூ.100 கட்டணத்தில் 4ஜி டேட்டா ஜூன் 30 , 2017 வரை வழங்க வாய்ப்புகள் உள்ளது.

கடந்த புதன்கிழமை ஸ்மார்ட்ஆப் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது , அதன் அடிப்படையில் ஜியோ 4ஜி சேவையை 4ஜி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் 42 சதவீத பயன்படுத்தவதாக தெரிவித்துள்ளது.

  • 2வது இடத்தில் ஏர்டெல் 4ஜி 17.55 சதவீதம்
  • 3வது இடத்தில் வோடாபோன் 4ஜி 12.26 சதவீதம்
  • 4வது இடத்தில் ஐடியா 4ஜி 11.50 சதவீதமும் உள்ளது
  • மற்றவை 16.7 சதவீதம் ஆகும்.

இந்தியாவின் நம்பர் 1 4ஜி : ரிலையன்ஸ் ஜியோ

வாடிக்கையாளர்களின் சராசரி 4ஜி டேட்டா பயன்பாடு

ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக 6.45 ஜிபி

ஏர்டெல் 4ஜி வாடிக்கையாளர்கள் சராசரியாக 1.28 ஜிபி

வோடாபோன் 4ஜி வாடிக்கையாளர்கள் சராசரியாக 1.29 ஜிபி

ஐடியா 4ஜி வாடிக்கையாளர்கள் சராசரியாக 1.32 ஜிபி

மேலும் இந்த ஆய்வில் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது என்னவென்றால் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் போன்ற வீடியோ தளங்கள் அமோக வளர்ச்சியை கடந்த சில மாதங்களாக பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்கள்  467 சதவீத வளர்ச்சியும் , வீடியோ தளங்கள் 336 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here