ரிலையன்ஸ் ஜியோ 4G ஆகஸ்ட் 15 முதல் ஆரம்பம்

ரிலையன்ஸ் ஜியோ 4G சேவையை வர்த்தகரீதியாக வருகின்ற ஆக்ஸ்ட் 15 சுதந்திர தினத்திலிருந்து தொடங்க திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி உள்ளது.

ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் சார்பில் விற்பனை செய்யப்படும் LYF ஸ்மார்ட்போன்களுடன்  மூன்று மாத வரையறையற்ற டேட்டா ,அழைப்புகள் என எராளமான இலவசங்களை வாரி வழங்கியுள்ளது.
தற்பொழுது 6 மில்லியன் பயணர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. சிடிஎம்ஏ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 4.5 மில்லியன் ஆகும். 
90 நாட்களுக்கு வரையறையற்ற இலவச வீடியோ கால் , எம்எம்எஸ் ,டேட்டா போன்றவற்றுடன் 4500 நிமிட இலவச அழைப்பினை Lyf ஸ்மார்ட்போன்களுடன் பன்டல் சலுகையில் ஜியோ 4G சிம் வாங்கினால் மட்டுமே பெறஇயலும்.ரிலையன்ஸ் ஜியோ சேவையை பெறுவதற்கு அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ரிடெயில் , LYF ஸ்மார்ட்போன் டீலர்கள் போன்றவற்றுடன் பன்டில் ஆஃபருடன் மட்டுமே பல சலுகைகள் கிடைக்கின்றன.

Recommended For You