ரிலையன்ஸ் குழுமத்தின் புதிய ரிலையன்ஸ் ஜியோ 4G சேவை முன்னனி நகரங்களில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் எல்ஒய்எப் (Lyf) பிராண்ட் மொபைலுடன் ஜியோ சிம் வாங்கும் போது 3 மாத அன்லிமிட்டேட் இலவச டேட்டா மற்றும் 4500 நிமிடங்கள் இலவச அழைப்பினை பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ 4G சேவை ஆரம்பம் - டேட்டா , அழைப்புகள் இலவசம்

ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை விற்பனை பிரிவில் தொடங்கப்பட்டுள்ள Lyf  ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்மொபைல்கள் ரூ.3,999 முதல் ரூ.19,499 விலை வரை சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஆன்லைன் மட்டுமல்லாமல் ரிலையன்ஸ் டிஜிட்டல் , ரிலையன்ஸ் எக்ஸ்பிரஸ் மேலும் முன்னனி சில்லறை வணிக கடைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

மேலும் படிங்க ; ரூ.3,999 விலையில் Lyf ஃபிளேம் 6 4ஜி மொபைல் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ  (https://www.jio.com) சேவைக்கான அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இணையத்தில் ஜியோ ஆப்ளிகேஷன்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.ரிலையன்ஸ் காம் , பார்தி இன்ஃபிராடெல் , ரிலையன்ஸ் இன்ஃபிராடெல் மற்றும் இன்டஸ் இன்ஃபிராடெல் போன்ற நிறுவன டவர்களுடன் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பயன்படுத்தி கொள்ளும்.

ரிலையன்ஸ் ஜியோ 4G சேவை ஆரம்பம் - டேட்டா , அழைப்புகள் இலவசம்

90 நாட்களுக்கு வரையறையற்ற இலவச வீடியோ கால் , எம்எம்எஸ் ,டேட்டா போன்றவற்றுடன் 4500 நிமிட இலவச அழைப்பினை Lyf ஸ்மார்ட்போன்களுடன் பன்டல் சலுகையில் ஜியோ 4G சிம் வாங்கினால் மட்டுமே பெறஇயலும்.

மேலும் படிங்க ; ரூ.8000 விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

ஏர்டெல் , வோடோஃபோன் , ஐடியா , பிஎஸ்என்எல் போன்ற 4G சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கடுமையான சாவாலினை ஜியோ தரவல்லதாக விளங்கும்.
சலுகை விலையில் சிறந்த மைக்ரோஎஸ்டி கார்டு வாங்க ; ரிலையன்ஸ் ஜியோ 4G சேவை ஆரம்பம் - டேட்டா , அழைப்புகள் இலவசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here