ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4G LTE சேவையை சோதனை ஓட்டத்தில் உள்ள நிலையில் ரிலையன்ஸ் சிடிஎம்ஏ சேவையில் 4G LTE சேவையை பெறுவதற்கான வழிமுறையை ஆர்காம் வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் 4G LTE சேவையை பெறுவது எவ்வாறு - RCOM

முதற்கட்டமாக  ரிலையன்ஸ் 4G LTE சேவையை 12 தொலைதொடர்பு வட்டங்களில் சேவையை தொடங்கியுள்ளது. அவை டெல்லி , மும்பை , கோல்கத்தா , குஜராத் ,ஆந்திர பிரதேசம் ,மஹாராஷ்ட்டிரா ,உத்திர பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்கு , பஞ்சாப் , ஒடிசா , மத்திய பிரதேசம் மற்றும் பிகார் ஆகும். மேலும் தமிழ்நாடு , கேரளா , கர்நாடாகா மற்றும் ராஜஸ்தான் போன்ற வட்டங்களில் அடுத்த சில வாரங்களில் வரவுள்ளது.

எவ்வாறு ரிலையன்ஸ் 4ஜி சேவையை பெறுவது ?

பீரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு சிடிஎம்ஏ வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள ரிலையன்ஸ் 4ஜி சிம் பெற்றுக்கொண்டு உங்களுடைய ரிலையன்ஸ் சிடிஎம்ஏ மொபைலில் இருந்து மெசேஜ் வாயிலாக 4G < space >19 digit SIM number (வாங்கிய சிம் எண்ணை)  1299 என்ற எண்ணுக்கு அனுப்பவும். அல்லது 1299 என்கின்ற எண்ணுக்கு உங்கள் சிடிஎம்ஏ மொபைலில் இருந்து அழைத்து 4ஜி சிம் கார்டின் 19 இலக்க சிம் எண்ணை பதிவு செய்யவும்.

மேலும் ரிலையன்ஸ் ஆர்காம் டேட்டாகார்டு வாடிக்கையாளர்கள் Rcom இணையத்தின் வாயிலாக 4ஜி அப்கிரேட் அப்ளிகேஷனை பூர்த்தி செய்து அனுப்பினால் 4ஜி டங்கிள் வீடு தேடி அடுத்த சில நாட்களில் வந்தடையும்.

8 மில்லியன் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்கள் அனைவரையும் அடுத்த சில மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையுடன் இணைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. அடுத்த சில மாதங்களில் ரிலையன்ஸ் சிடிஎம்ஏ சேவையை திரும்ப பெற்றுக்கொள்ள உள்ளது.

சிடிஎம்ஏ வாடிக்கையாளர் அனைவருக்கும் 4ஜி சேவையை மாறிக்கொள்ளும் புதிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அறிமுக சலுகையாக 150 நிமிட இலவச லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் மற்றும் ரூ.93 முதல் ரூ.97 வரையிலான கட்டண மாறுபாட்டில் வட்டங்களை பொருத்து 10GB 4ஜி இன்ட்ர்நெட் டேட்டா 30 நாட்களுக்கு கிடைக்கும்.

கவனிங்க

30 நாட்களுக்கு பிறகு பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.252 விலையில் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் ரூ.449 விலையில் 2ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.300 விலையில் 1ஜிபி டேட்டா கிடைக்கும். போட்டியாளர்கள் வோடோஃபோன் , ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் பிரிபெய்டு சந்தாதாரர்கள் 1ஜிபி , 2ஜிபி டேட்டா ரூ.255 மற்றும் ரூ.455 விலையில் கிடைக்கும். போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் 1ஜிபி டேட்டா ரூ.250 ஆக இருக்கும்.

அடுத்த சில வாரங்களில் தமிழ்நாடு , சென்னை போன்ற வட்டங்களில் 4ஜி சேவையை தொடங்க உள்ளது. இணைந்திருங்கள்….. கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்துடன்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here