இந்தியாவின் ரிலையனஸ் நிறுவனம் ரூ.93 க்கு 10GB 4G  டேட்டா இன்ட்ர்நெட் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் சிடிஎம்ஏ சந்தாதாரர்களுக்கு இந்த சிறப்பு சலுகையை ஆர்காம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையுடன் இணைந்து ஆர்காம் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய சிடிஎம்ஏ மொபைல்கள் வாயிலாக வழங்க உள்ளதாக டிராய் அமைப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 
முதற்கட்டமாக ஜூலை மாத தொடக்கம் முதல் டெல்லி  ,  மும்பை , கோல்கத்தா , குஜராத் ,ஆந்திர பிரதேசம் ,மஹாராஷ்ட்டிரா ,உத்திர பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்கு , பஞ்சாப் , ஒடிசா , மத்திய பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய 12 தொலைதொடர்பு வட்டங்களுக்கு தொடங்கப்பட உள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு , கேரளா , கர்நாடாகா மற்றும் ராஜஸ்தான் போன்ற தொலைதொடர்பு வட்டங்களுக்கு ஜூலை மத்தியில் தொடங்க திட்டம்மிட்டுள்ளதாக தொலை தொடர்பு துறைக்கு ஆர்காம் டிதம் அனுப்பியுள்ளது. அனுமதி கிடைத்த உடன் விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

ரூ.93 முதல் ரூ.97 வரையிலான விலையில் வட்டங்களை பொருத்து கட்டணம் விகிதம் மாறினாலும் பழைய சிடிஎம்ஏ மொபைல்களை புதிய 4ஜி வசதியை பெறும் வகையில் மேம்படுத்தும் நோக்கில் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக பிடிஐ செய்தி குறிப்பில் ஆர்காம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மற்ற போட்டியார்கள் வழங்ககூடிய 4ஜி அலைவரிசை டேட்டா கட்டணத்தை விட 94 சதவீதம் குறைவான விலையில் இந்த சேவையை ஆர்காம் தொடங்க உள்ளது.

50-70% Off Sarees, Dress Materials… Celebrity Collection

இதுபற்றி உங்கள் கருத்து என்ன ? கீழுள்ள கமெண்ட் பாக்சில் பேஸ்புக் பட்டனை அழுத்தி உங்கள் பெயரில் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்…