ரூ. 999ல் 4ஜி VoLTE ஜியோ Lyf மொபைல் படம் கசிந்தது

அதிரடி அறிவிப்புகளால் தொலைதொடர்பு வட்டாரத்தை மிகுந்த பரபரப்பாக வைத்திருக்கும் ஜியோ தற்பொழுது ரூ.999 விலையில் 4ஜி வசதி கொண்ட ஜியோ மொபைல் அறிமுகம் செய்ய உள்ளது. பட்டன் வசதி கொண்ட ஃபீச்சர் மொபைலாகும்.

ஜியோ 4ஜி சேவையில் செயல்பட கூடிய இந்த பட்டன் மொபைல் போனில் வீடியோ கால் ஆப்ஷன் முதல் அனைத்து விதமான வசதிகள் கொண்டதாகவும் ஜியோ செயலிகளான மைஜியோ , ஜியோ டிவி , ஜியோ ம்யூசிக் போன்றவற்றை இயக்கும் வகையில் வசதிகள் இருக்கலாம்.

சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ள படத்தின் வாயிலாக இதுபோன்ற மொபைலை ஜியோ அறிமுகம் செய்யலாம் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. இந்த தளத்திற்கு பெயர் குறிப்பிடபடாத நபர் அனுப்பியுள்ள படத்தில் ஜியோ 4ஜி பட்டன் மொபைலில் மைஜியோ , ஜியோ டிவி , ஜியோ ம்யூசிக் போன்றவற்றுக்கு பட்டன்கள் தனியாக இணைக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் இந்த மொபைல் VoLTE ஆதரவினை கொண்டே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. ஜியோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி டிசம்பர் 31, 2016 வரையிலான காலகட்டத்ததில் 72.4 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

 

Recommended For You