விரைவில் ஜியோ லிங்க் டிடிஎச் மற்றும் பிராட்பேண்ட் சேவை

இந்திய தொலை தொடர்பு சேவையில் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வரும் ஜியோ நிறுவனத்தின் ஜியோ லிங்க் டிடிஎச் மற்றும் ஜியோ பிராட்பேண்ட் சேவை அடுத்த சில வாரங்களில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோ லிங்க்

இணையதளத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட உள்ள ஜியோ டிடிஎச் சேவையில் பயன்படுத்தப்பட உள்ள செட் டாப் பாகஸ் படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜியோ க்யூக் ரீசார்ஜ் பக்கத்தில் இரண்டு புதிய சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளது.

நேரடியான டிடிஎச் போன்ற சேவைகள் போல அல்லாமல் இணையத்தின் வாயிலாக செயல்படக்கூடிய ஐபிடிவி எனும் இணையதள சேவையில் இயங்கும் வகையிலான தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை ஜியோ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோ டிடிஎச் பெயர் ஜியோ லிங்க் என அழைக்கப்படலாம்.

ஜியோ ஹோம் பிராட்பேண்ட்

 

அதிகபட்சமாக 1Gbps வேகத்தில் இணைய சேவையை வழங்கும் நோக்கில் ஜியோஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த சேவை முன்னோட்டமாக மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களின் முக்கிய பகுதியில் சோதனைசெய்யப்படு வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

சமீபத்தில் ஆக்ட் பிராட்பேண்ட் நிறுவனம் 1Gbps வேகத்திலான இணைய சேவையை ரூ 5,999 மாத கட்டணத்தில் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.

சமீபத்தில் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் நிறைவு தேதி அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில் புதிய பிளான் ஒன்றை டிராய் விதிமுறைகளுக்குள் வரும் வகையில் உருவாக்கி வருவதனால் இன்று அல்லது சில தினங்களுக்கு புதிய பிளான் விபரங்கள் வெளியாகும்.

ஜியோ செய்திகளை தொடர்ந்து படிக்க  fb.com/gadgetstamilan

 

Recommended For You