10 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ 4ஜி

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ஜியோ தற்பொழுது 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. ஜியோ இலவச சேவை மார்ச் 31 , 2017 வரை வழங்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவையை கடந்த செப்டம்பரில் தொடங்கி வருகின்ற மார்ச் 31 ,2017 வரை வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் போன்றவற்றில் இலவச டேட்டா சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகள் , எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்கள் வழங்கப்படுகின்றது. மேலும் சமீபத்தில் நாம் வெளியிட்டிருந்த செய்தியின் அடிப்படையில் இலவச 4ஜி அல்லாமல் ரூ.100 கட்டணத்தில் 4ஜி டேட்டா ஜூன் 30 , 2017 வரை வழங்க வாய்ப்புகள் உள்ளது.

மிக குறுகிய காலத்திலே ரிலையன்ஸ் ஜியோ 100 மில்லியன்வாடிக்கையாளர்களை பெற்று மிக ப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Recommended For You