அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் இணைய வேகம் அதிகபட்சமாக 1 Gbps வேகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுத சோதனை அடிப்படையில் புனே மற்றும் மும்பை நகரங்களில் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சோதனை தொடங்கப்பட்டுள்ளது. ஃபைபர் டூ தி ஹோம் (fibre to the home -FTTH) சேவையை குறிப்பட்ட சில நகரங்களில் அடுத்த வருடத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
சோதனை ஓட்டத்தில் உள்ள ஜியோ ஜிகாஃபைபர் சேவையில் சராசரியாக 100Mbps வேகத்திலும் 90Mbps அப்லோட் வேகத்திலும் தொடங்கியுள்ள சேவை படிப்படியாக வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் அடுத்த வருடத்தில் முதற்கட்டமாக 100 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் மூன்று மாதம் இலவச இணைப்பு வழங்கப்படும். சோதனையில் உள்ள இடங்களிலும் 3 மாத இலவச சேவை வழங்கப்பட்டுள்ளது.
ஜியோ ஜிகாஃபைபர் சேவையில் 1ஜிபி ஃபைலை வெறும் 20 விநாடிகளில் தரவிற்க்கம் செய்து விடுவதாக சோதனை ஓட்டத்தை பயன்படுத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்
ஜியோ 4ஜி சேவையில் அழைப்புகள் , டேட்டா , எஸ்எம்எஸ் என அனைத்தும் இலவசமாக வருகின்ற டிசம்பர் 31 , 2016 வரை கிடைக்கும்.