சர்வதேச அளவில் 75 நாடுகளில் ஓபன்சிக்னல் நிறுவனம் 4ஜி எல்டிஇ நெட்வொர்க் சேவை பற்றி ஆயவறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 4ஜி சேவை கிடைப்பதில் இந்தியா 15வது இடத்திலும் 4ஜி வேகத்தில் இந்தியா 74வது இடத்திலும் உள்ளது.

4ஜி எல்டிஇ

சர்வதேச அளவில் 4ஜி எல்டிஇ சேவை பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் ஜியோ நிறுவனத்தின் வரவுக்கு பின்னால் 4ஜி சேவை 81.1 சதவிகிதம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜி சேவை வழங்குவதில் தென் கொரியா 96.38 சதவிகித பங்களிப்புடன் முதலிடத்திலும், அதனை தொடர்ந்து ஜப்பான்,நார்வே, அமெரிக்கா ஹாங்காங் போன்ற நாடுகள் இடம்பிடித்துள்ளது.இந்த வரிசையில் 15வது இடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.

4ஜி வேகம்

இந்தியாவில் 4ஜி வேகத்தின் சராசரி அளவு கூட கிடைக்க பெறாமல் 3ஜி வேகத்தின் அதிகபட்ச அளவை விட சற்று கூடுதலாக மட்டுமே பெற்றிருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் சராசரி 4ஜி எல்டிஇ வேகம் நொடிக்கு 5.14 எம்பி மட்டுமே ஆகும் 75வது இடத்தில் கோஸ்ட் ரிக்கா உள்ளது. இலங்கை,பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட குறைந்த வேகத்தையே இந்தியாவில் 4ஜி பயனாளர்கள் பெறுவதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. 3ஜி சேவையின் அதிகபட்ச தரவிறக்க வேகமே நொடிக்கு 4.4 எம்பி ஆகும்.