சமீபத்தில் ஏர்டெல் வெளியிட்டுள்ள ரூ.8 முதல் ரூ.399 வரையிலான திட்டங்கள் ஜியோ 4ஜி சேவைக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், ஜியோவுக்கு ஈடுகொடுக்காமலே ஏர்டெல் ஆஃபர் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் 4ஜி Vs ஜியோ 4ஜி - பெஸ்ட் டேட்டா பிளான்

ஏர்டெல் ஆஃபர்

ரூ.8 க்கு தொடங்குகின்ற ஏர்டெல் ஆஃபர் ரூ.399 வரையில் பெரும்பாலான திட்டங்கள் ஜியோ நிறுவன திட்டத்த்தின் விலையிலே அமைந்திருப்பதால் அதே சலுகையை ஏர்டெல் வழங்குகின்றதா என்பதனை அறிந்து கொள்ளலாம்.

ரூ. 5 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற ஒருமுறை ரீசார்ஜ் திட்டத்தில் 2ஜி/3ஜி பயனாளர்கள் 4ஜி சேவைக்கு மாறினால் 4ஜிபி டேட்டா 7 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக கிடைக்கும்.

ஏர்டெல் 4ஜி Vs ஜியோ 4ஜி - பெஸ்ட் டேட்டா பிளான்

1. ரூ. 8 திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் அனைத்து அழைப்புகளும் நிமிடத்திற்கு 30 பைசா கட்டணத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றது.

2.  ரூ.15க்கு ரீசார்ஜ் செய்தால் 27 நாட்களுக்கு அனைத்து லோக்கல் அழைப்புகளையும் நிமிடத்திற்கு 10 பைசா கட்டணத்தில் பேசலாம்.

டெலிகாம் விலை டேட்டா கால் வேலிடிட்டி
ஏர்டெல் ரூ.15     – 10p/min (loc) 28 நாட்கள்
ஜியோ ரூ.19 200MB இலவசம் 1 நாள்

 

3. ரூ.198 பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , 28 நாட்கள் கால அளவுடன், 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கினால் 10 சதவீதம் கேஷ்பேக் சலுகையை ரீசார்ஜ் செய்யும் போது பெறலாம்.

4. ரூ.199 பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , 29 நாட்கள் கால அளவுடன், 1ஜிபி, 4ஜி டேட்டா வழங்குகின்றது.

5. ரூ.295 பிளானில் 84 நாட்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கினால் 10 சதவீதம் கேஷ்பேக் சலுகையை ரீசார்ஜ் செய்யும் போது பெறலாம்.

ஏர்டெல் 4ஜி Vs ஜியோ 4ஜி - பெஸ்ட் டேட்டா பிளான்

ஏர்டெல் டாக்டைம் சலுகைகள்

ரூ. 40 ரீசார்ஜ் செய்தால் ரூ.35 டாக்டைம் , ரூ.60 ரீசார்ஜ் செய்தால் ரூ.58 டாக்டைம் மற்றும் ரூ.90 ரீசார்ஜ் செய்தால் ரூ.88 டாக்டைம் பெறலாம் மூன்று டாப்அப் கார்டுகளும் வரம்பற்ற வேலிடிட்டி கொண்டதாகும்.

ஏர்டெல் Vs ஜியோ – எது பெஸ்ட் டேட்டா பிளான்

1. ரூ.149 திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் வரம்பற்ற ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் வழங்குவதுடன் 2GB 4G டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகின்றது. மற்ற நெட்வொர்க்குகளுக்கு உங்கள் டேரிஃப் விதிப்படி கட்டணம் வசூலிக்கப்படும்.

டெலிகாம் விலை டேட்டா கால் வேலிடிட்டி
ஏர்டெல் ரூ.149   2ஜிபி A2A இலவசம் 28 நாட்கள்
ஜியோ ரூ.149   2ஜிபி இலவசம் 28 நாள்

 

2. ரூ.349 பிளானை அறிமுகம் செய்துள்ள ஏர்டெல் நிறுவனம் 28 நாட்கள் கால அளவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் தினசரி 1ஜிபி டேட்டா வழங்குகின்றது. ஆனால் 7 நாட்களுக்கு 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும், அதன்பிறகு ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் நிமிடத்துக்கு 10 பைசா மற்ற நெட்வொர்க் அழைப்பு நிமிடத்துக்கு 30 பைசா ஆகும். அதே போல இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மட்டுமே இலவச அழைப்பு, அதன்பிறகு ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் நிமிடத்துக்கு 10 பைசா மற்ற நெட்வொர்க் அழைப்பு நிமிடத்துக்கு 30 பைசா ஆகும்.

ஜியோ நிறுவனமும் இதே போன்ற ஆஃபரை வழங்கி வந்தாலும் வரம்பற்ற டேட்டாவை வழங்குகின்றது. அதாவது முதல் 20ஜிபி டேட்டா உயர்வேக 4ஜி தரத்துடன் அதன்பிறகு128Kbps வேகத்தில் டேட்டா பெறலாம். ஆனால் ஏர்டெல் நிறுவனத்தில் அவ்வாறு பெற இயலாது. ஆனால் ஜியோ வழங்குகின்ற 309 திட்டம் 56 நாட்களுக்கு 56ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது.

டெலிகாம் விலை டேட்டா கால் வேலிடிட்டி
ஏர்டெல் ரூ.349   28GB இலவசம்  28 நாட்கள்
ஜியோ ரூ.349   20GB இலவசம்  56 நாட்கள்
ஜியோ ரூ.309   56GB இலவசம்  56 நாட்கள்

 

ஏர்டெல் 4ஜி Vs ஜியோ 4ஜி - பெஸ்ட் டேட்டா பிளான்

3. ரூ.399 டேட்டா பிளான் ஜியோ தன் தனா தன் திட்டத்தில் 84நாட்களுக்கு தினசரி 1ஜிபி உயர்வேக 4ஜி டேட்டா , அதன்பிறகு 128Kbps வேகத்தில் டேட்டா பெறலாம்.

ஏர்டெல் நிறுவனம் ரூ.399 திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்குவதுடன், ரோமிங் அழைப்புகளும் இலவசம். இதுதவிர, தினமும் 1GB  4ஜி டேட்டா சலுகையும் கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு உண்மையல்ல, 7 நாட்களுக்கு 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும், அதன்பிறகு ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் நிமிடத்துக்கு 10 பைசா மற்ற நெட்வொர்க் அழைப்பு நிமிடத்துக்கு 30 பைசா ஆகும். அதே போல இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மட்டுமே இலவச அழைப்பு, அதன்பிறகு ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் நிமிடத்துக்கு 10 பைசா மற்ற நெட்வொர்க் அழைப்பு நிமிடத்துக்கு 30 பைசா ஆகும்.

டெலிகாம் விலை டேட்டா கால் வேலிடிட்டி
ஏர்டெல் ரூ.399   28GB இலவசம்  28 நாட்கள்
ஜியோ ரூ.399   84GB இலவசம்  84 நாட்கள்

 

பொதுவாக அனைத்து வட்டங்களிலும் உள்ள ப்ரீபெய்டு ஏர்டெல் எண்களுக்கு வழங்குகின்ற சலுகைகள் கிடைக்க பெறும் என்றாலும் வாடிக்கையாளர்கள் வாரியாக மாறுபடும் என்பதனால் ஏர்டெல் பயனாளர்கள் மை ஏர்டெல் ஆப் வழியாக அறிந்து கொள்ளலாம். ஆனால் ஜியோ சலுகைகள் அனைத்து பிரைம் ரீசார்ஜ் செய்த பயனாளர்களுக்கு பொருந்தும், ரோமிங் உள்ளிட்ட அனைத்து நெட்வொர்கிலும் ஜியோ அழைப்புகள் முற்றிலும் இலவசம் ஆகும்.

ஏர்டெல் 4ஜி Vs ஜியோ 4ஜி - பெஸ்ட் டேட்டா பிளான்

உங்கள் விருப்பமான நெட்வொர்க் எது மறக்காம கமெண்ட் பன்னுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here