ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஆசஸ் நிறுவனமும் இணைந்த 100ஜிபி கூடுதல் இலவச டேட்டா பயனாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஜியோ ஆசஸ்

ஜியோ நிறுவனத்துடன் இணைந்து ஆசஸ் மொபைல் நிறுவனம் மூன்று வகையான திட்டங்களின் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 100ஜிபி டேட்டா வரை வழங்க உள்ளது. இந்த இலவச கூடுதல் டேட்டா சலுகையை பெற ஆசஸ் மொபைல்களை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் வழியாக ஜூன் 16ந் தேதிக்கு பிறகு வாங்கியுள்ள அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.

மூன்று வகையான பிரிவுகளின் மொபைல் மாடல் பட்டியல் பின்வருமாறு ;-

ஜென்ஃபோன் செல்ஃபீ, ஜென்ஃபோன் மேக்ஸ், ஜென்ஃபோன் லைவ், ஜென்ஃபோன் கோ 4.5 LTE, ஜென்ஃபோன் கோ 5.0 LTE மற்றும் ஜென்ஃபோன் கோ 5.5 LTE உள்ளிட்ட மொபைல் மாடல்களுக்கு 3ஜிபி டேட்டா கூடுதலாக மாதந்தோறும் வழங்கப்படும்.

ஜென்ஃபோன் 2, ஜென்ஃபோன் 2 Laser, ஜென்ஃபோன் 2 Laser 5.5, ஜென்ஃபோன் 3S Max, ஜென்ஃபோன் 3 Laser, ஜென்ஃபோன் 3 Max 5.2, and ஜென்ஃபோன் 3 Max 5.5 உள்ளிட்ட மொபைல் மாடல்களுக்கு 5ஜிபி டேட்டா கூடுதலாக மாதந்தோறும் வழங்கப்படும்.

ஜென்ஃபோன் ஜும், ஜென்ஃபோன் 3 டீலக்ஸ்,ஜென்ஃபோன் 3 அல்ட்ரா, ஜென்ஃபோன் 3 5.2, மற்றும் ஜென்ஃபோன் 3 5.5 உள்ளிட்ட மொபைல் மாடல்களுக்கு 10ஜிபி டேட்டா கூடுதலாக மாதந்தோறும் வழங்கப்படும்.

நிபந்தைனகள்

ஜூன் 16ந் தேதிக்கு பிறகு மேலே கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள மொபைல் பயனாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.309 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் மாதந்தோறும் கூடுதல் டேட்டா ரீசார்ஜ் செய்த 48 மணி நேரத்தில் தங்களது ஜியோ ப்ரைம் மொபைல் நம்பருக்கு வழங்கப்படும்.

இதனை பெறுவதற்கு மைஜியோ ஆப் வாயிலாக பெற்றுக்கொள்ள இந்த செயலியை நிறுவிய பின்னர், பின்வரும் வழிமுறையை பின்பற்றுங்கள் MyJio App ⇒ My Vouchers ⇒ View voucher  Recharge my number  Confirm recharge  Successful recharge என மேற்கொண்டால் மாதந்தோறும் டேட்டாவை பெறலாம்.