இந்திய தொலைதொடர்பு வட்டாரத்தை மிகுந்த பரபரப்பாக்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகையில் அறிமுகம் செய்யப்பட்ட இலவச கால் சேவைக்கு தடை விதிக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த போட்டியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜியோ இலவச கால் சேவை

இந்திய சந்தையின் தொலைதொடர்பு நிறுவனங்களின் முகப்பை மாற்றிய பெருமை கொண்ட ஜியோ நிறுவனத்துக்கு எதிராக போட்டியாளர்களான ஏர்டெல்,வோடபோன் மற்றும் ஐடியா ஆகியவை தங்களுடைய கோரிக்கையை வலுப்படுத்தும் விதமான நடைமுறைக்கு டிராய் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜியோவை தவிர மற்ற நிறுவனங்கள் டிராய் கூட்டத்தில் முக்கியமான கோரிக்கையாக குறைந்தபட்ச கட்டண திட்டத்தை அழைப்புகள் மற்றும் டேட்டா சேவைக்கு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளன. அதாவது அழைப்புகள் மற்றும் டேட்டா போன்ற சேவைகளை வழங்கும் பொழுது அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான அடிப்படை விலையை நிர்ணயம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளன.

அவ்வாறு அடிப்படை விலையை நிர்ணயம் செய்தால் ஜியோ நிறுவனம் அறிவித்திருக்கும் இலவச வாய்ஸ் கால் சேவை நிரந்தரமாக ரத்தாகி கட்டண சேவையாக அழைப்புகளும் மாறலாம். இதற்கு ஜியோ கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

இன்டர்கனெக்டிவிட்டி இனைப்பு புள்ளி விலை தற்போது ஒரு நிமிடத்திற்கு 14 பைசாவாக உள்ளது இதன் அடிப்பையில் அழைப்புகளின் விலையை நிர்ணயம் செய்ய ஆவணம் செய்கின்றன. ஆனால் ஜியோ நிறுவனம் ஐசியூ எனப்படும் இன்டர்கனெக்டிவிட்டி இனைப்பு புள்ளி முழுமையாக நீக்குவதற்கு கோரிக்கையை விடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆனையத்தின் தலைவர் சர்மா கூறுகையில் சில நாடுகளில் இதுபோன்ற அடிப்படையான விலை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்கோ நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கையை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்க்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.