இந்திய தொலை தொடர்பு துறையை தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் ஜியோ தனது முத்திரையை பதிக்க உள்ள நிலையில் ஐபிஎல் ஸ்பான்சர்களில் அதிக மதிப்பை பெற்றதாக ஜியோ விளங்குவதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2017 : ஐபிஎல் தொடர் ஸ்பான்சரிலும் ஜியோ முதலிடம்

ஐபிஎல் 2017

  • சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் அணியாக மும்பை இந்தியன்ஸ் விளங்குகின்றது.
  • 10வது ஐபிஎல் போட்டிகளில் உள்ள 82 ஸ்பான்சர்களில் முதலிடத்தை ஜியோ பெற்றுள்ளது.
  • 10வது ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விளங்கும் விவோஇரண்டாவது இடத்தில் உள்ளது.

mConsult என்ற மையம் நடத்தி ஐபிஎல் வாட்ச என்ற பெயரிலான சமூக வலைதளம் சார்ந்த சர்வே முடிவுகளில் 10வது ஐபிஎல் தொடரில் முதன்மையான ஸ்பான்சராக விளங்கும் விவோ பிராண்டை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் ஜியோ உள்ளதாக தெரிவித்துள்ளது.

முதல் மூன்றிடங்களில் ஜியோ முதலிடத்திலும் அதனை தொடர்ந்து விவோ மற்றும் வோடபோன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2017 : ஐபிஎல் தொடர் ஸ்பான்சரிலும் ஜியோ முதலிடம்

மேலும் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு உள்ளதாகவும் , இந்த அணிக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மூன்றாவது இடத்தில் சாருகானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.

இந்த 10வது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகளில் 7 அணிகளுக்கு ஜியோ நிறுவனம் ஜெர்ஸி பேக் அல்லது லீட் ஆரம் ஸ்பான்சாராக உள்ளது குறிப்பிடதக்கதாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here