இந்தியாவின் ஸ்மார்ட்போன் என வெளியிடப்பட்டுள்ள ஜியோபோன் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே ஜியோ இணையதளம் முடங்கியது.

ஜியோபோன் இணையதளம் முடங்கியது

ரூ.1500 திரும்ப பெறதக்க டெபாசிட் தொகையாக கொண்டு விலையில்லா 4ஜி பீச்சர்  மொபைலாக வெளியிடப்பட்டுள்ள ஜியோபோன் முன்பதிவு இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலே இணையத்தை அனுகுவதில் பயனாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

தினமும் ஒரு லட்சம் ஃபீச்சர் மொபைல் போன்களை விற்பனை செய்ய இலக்கினை நிர்ணையித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் வோல்ட்இ 4ஜி பீச்சர் போனை ஜியோ அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் ரூ. 500 முன்பணமாக செலுத்தி பதிவு செய்த கொண்ட பின்னர் டெலிவரி சமயத்தில் மீதமுள்ள ரூ.1000 செலுத்தி மொபைலை பெற்றுக் கொள்ளலாம்.

2.4 அங்குல திரையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்த மொபைலில் முன்னேற்பாடாக ஜியோ செயலிகளான ஜியோ ம்யூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து ஜியோ நிறுவன ஆப்ஸ்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைல் 512எம்பி ரேம் கொண்டு செயல்பட்டாலும் உள்ளடங்கிய மெமரி 8 ஜி.பி மற்றும் கூடுதலாக 64 ஜி.பி வரை நீட்டிக்க கூடிய  வகையில் மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.

 

ஜியோ இணையதளம் தற்போது வரை முழுமையாக முடங்கியுள்ளது.