ஜியோ வழங்க உள்ள அடுத்த அதிரடி ஆஃபர் என்ன ?

டிராய் உத்தரவை தொடர்ந்து ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிய பிளான் மற்றும் ஆஃபர்கள் விரைவில் வரவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.

ஜியோ அடுத்த ஆஃபர்

புதிய  சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தின் அடிப்படையில் ஏப்ரல் 15க்குள் ப்ரைம் மற்றும் முதல் மாத ரீசார்ஜ் 303 அல்லது அதற்கு மேற்பட்ட பிளான்களில் ரீசார்ஜ் செய்கின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜூன் வரை இலவச சேவையை தொடர்ந்து வழங்குவதாக அறிவித்திருந்தது.

டிராய் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஏப்ரல் 15 வரை வழங்கப்பட்ட ப்ரைம் மற்றும் முதல் மாத ரீசார்ஜ் செய்தால் ஜூன் வரை வழங்கப்பட்ட சம்மர் சர்ப்ரைஸ் சலுகை நிறுத்தப்பட்டாலும், இதுவரை ரீசார்ஜ் செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கு ஜூன் வரை இலவசமாக வழங்கப்படுவதுனை ஜியோ உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜியோ அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் இருந்து சம்மர் சலுகைகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தகவலை ஜியோ இணையதளம் வழங்க தொடங்கியுள்ளது. அதாவது விரைவில் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான சலுகைகளை வழங்கும் வகையிலான பிளான்கள் உருவாக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஜியோ பிரைம் ரீசார்ஜ் ஆப்ஷன் இப்பொழுது மாதந்திர ரீசார்ஜ் பிளானுடன் இணைத்து பன்டில் சலுகையாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ மனி வழியாக ரீசார்ஜ் செய்யும் பொழுது ரூபாய் 50 வரை கேஸ்பேக் சலுகையை வழங்கியுள்ளது.

அடுத்த பிளான் என்ன அறிந்து கொள்ள இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்துடன்

 

Recommended For You