கடந்த 6 மாதங்களாக இலவச சேவையை வழங்கி வந்த ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு ஜியோ தனது சேவையை துண்டிக்க ஆரம்பித்துள்ளது.

ஜியோ ரீசார்ஜ் செய்யாதவர்கள் இணைப்பு துண்டிப்பு

ஜியோ இணைப்பு துண்டிப்பு

  • முதல் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்கும் ரிலையன்ஸ் ஜியோ
  • 100 மில்லியன் பயனர்களை 170 நாட்களில் ஜியோ பெற்றது.
  • தன் தனா தன் சலுகைகளை ரீசார்ஜ் வழங்கப்பட்டு வருகின்றது.

ஜியோ ரீசார்ஜ் செய்யாதவர்கள் இணைப்பு துண்டிப்பு

கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ தொலை தொடர்பு சேவையில் முதல் மூன்று மாதங்களுக்கு வெல்கம் ஆஃபர் என்ற பெயரிலும் 2017 ஆம்ஆண்டு முதல் ஹேப்பி நியூ ஆஃபர் என வழங்கப்பட்ட சேவைகளை நிறைவு செய்யும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்தது.

முதற்கட்டமாக பிரைம் ரீசார்ஜ் மற்றும் பல்வேறு அதிரடி பிளான்களை வெளியிட்டதை தொடர்ந்து  72 மில்லியன் வாடிக்கையாளர்களை மார்ச் 31ந் தேதி வரை ரீசார்ஜ் செய்திருந்த நிலையில் ரீசார்ஜ் செய்வதற்கான காலத்தை ஏப்ரல் 15 வரை அதிகரித்தும், சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டதற்கு டிராய் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் ஏபரல் 9ந் தேதி வரை ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மூன்று மாதம் இலவசம் என உறுதி செய்த நிலையில் புதிய தன் தனா தன் பிளானை ஜியோ வெளியிட்டது.

ஜியோ ரீசார்ஜ் செய்யாதவர்கள் இணைப்பு துண்டிப்பு

தன் தனா தன் பிளானில் ரீசார்ஜ்செய்தால் 84 நாட்களுக்கு  ரீசார்ஜ செய்த பிளான் அடிப்படையில் தினம் 1ஜிபி டேட்டா அல்லது 2ஜிபி டேட்டா பெறும்வகையில் ப்ரைம், ப்ரைம் அல்லாத வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.

இணைப்பு துண்டிப்பு

இந்நிலையில், இலவச சேவைக்குப் பின் குறைந்தபட்சமாக பிரைம் உள்பட முதல் ரீசார்ஜ் கூட செய்யாத அதாவது எந்த ரீசார்ஜூம் மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு சேவை துண்டிப்பு தொடர்பான குறுஞ்செய்தி அறிவிப்பை ஜியோ அனுப்பி வருகின்றது. எனவே இதுவரை ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here