ஜியோ என சொன்ன சும்மா அதிருதில்ல என்பதற்கு ஏற்ப ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி சேவையில் சர்வதேச அழைப்புகளுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜியோ சர்வதேச அழைப்பு கட்டணம் குறைப்பு

ஜியோ சர்வதேச அழைப்புகள்

  • குறைந்தபட்ச சர்வதேச அழைப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ரூபாய் மூன்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
  •  சிங்கப்பூர்,இங்கிலாந்து,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ரூ.3 மட்டுமே.
  • ரூ.501 சர்வதேச ரேட் கட்டர் பிளான் கிடைக்கின்றது.

ஜியோ சர்வதேச அழைப்பு கட்டணம் குறைப்பு

இதுவரை முதல் ரீசார்ஜ் மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களின் சேவையை துண்டிக்க தொடங்கியுள்ள ஜியோ தொடர்ந்து தன் தனா தன் பிளானை தொடர்ந்து செயல்படுத்திவருகின்றது.

சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு என சிறப்பு பிளான்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. குறைந்தபட்ச அழைப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ரூ. 3 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 501 கட்டணமாக செலுத்தி சர்வதேச அழைப்புகளுக்கான ரேட் கட்டர் பேக்கை ஆக்டிவேட் செய்யும் பொழுது பல்வேறு நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் அழைப்புகளை பெறலாம்.

ஜியோ சர்வதேச அழைப்பு கட்டணம் குறைப்பு

ஜியோ ரூ.501 பிளான் சிறப்பம்சங்கள்

  • குறைந்தபட்ச அழைப்பு கட்டணம் ரூபாய் 3 மட்டுமே..!
  •  யு.எஸ், இங்கிலாந்து, கனடா, ஹாங்காங், சிங்கப்பூர், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், இத்தாலி, லக்ஸம்பர்க், மால்டா, போலந்து, போர்ச்சுகல், போர்டோ ரிகோ, ஸ்வீடன், சுவிச்சர்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கு அழைக்க கட்டணமாக நிமிடத்திற்கு ரூபாய் 3 மட்டுமே வசூலிக்கப்படும்.
  • பிரான்ஸ், பாக்கிஸ்தான், இஸ்ரேல், ஜப்பான், அர்ஜென்டீனா, டென்மார்க் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அழைக்க கட்டணமாக நிமிடத்திற்கு ரூபாய் 4.80 மட்டுமே வசூலிக்கப்படும்.

ஜியோ சர்வதேச அழைப்பு கட்டணம் குறைப்பு

ஒவ்வொரு நாடுகளுக்கு எவ்வளவு அழைப்பு கட்டணம் என முழுமையாக அறிந்து கொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி பிடிஎஃப் பைலை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

https://reliance.ssl.cdn.sdlmedia.com/file/636197293012108161YG.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here