ஜியோ 4ஜி சேவையில் அதிரடி டேட்டா சலுகையாக ரூ. 309 ரீசார்ஜில் மாதந்தோறும் டபூள் டேட்டா சலுகையை நேற்று அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 309க்கு 448 ஜிபி வழங்கும் ஜியோ சலுகை யாருக்கு ?

ஜியோ சாம்சங் கேலக்ஸி சலுகைகள்

  • 8 மாதங்களுக்கு அதாவது ஜனவரி 2018 வரை மாதந்தோறும்  டபூள் டேட்டா சலுகையை பெறலாம்.
  • சாதாரணமாக ரூ.309 திட்டத்தில் மாதம் 28 ஜிபி வழங்கப்படுகின்றது.
  • பிரைம் கட்டணம் செலுத்தி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகையை பெற இயலும்.

ரூ. 309க்கு 448 ஜிபி வழங்கும் ஜியோ சலுகை யாருக்கு ?

ரூபாய் 57,900 விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஸ்மார்ட்போன்களுக்கு சாம்சங் மற்றும் ஜியோ இணைந்து அதிரடி டேட்டா சலுகைகளை அடுத்த 8 மாதங்களுக்கு வழங்க உள்ளது.

ப்ளிப்காரட் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் வழியாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற மே 5 முதல் விற்பனைக்கு புதிய கேலக்ஸி எஸ்8 ரக மொபைல்கள் கிடைக்க உள்ளது. கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் மொபைல் பயன்படுத்த உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் ரூபாய் 309 ரீசார்ஜ் செய்தால் சராசரியாக மற்ற வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அதன் பிறகு 128Kbps வரம்பற்ற டேட்டா வழங்குகின்றது.

ரூ. 309க்கு 448 ஜிபி வழங்கும் ஜியோ சலுகை யாருக்கு ?

இந்நிலையில, எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் மொபைல் பயன்படுத்துவோர்களுக்கு மேலும் 1ஜிபி கூடுதலாக அதாவது தினமும் 2ஜிபி டேட்டா அதாவது மாதம் 56 ஜிபி என 8 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த சலுகையில் 8 மாதங்களுக்கு (56×8) மொத்தமாக 448 ஜிபி டேட்டா கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் இதற்கு முன்பாக ஜியோ நிறுவனத்துடன் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 4ஜி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியது என்பது குறிப்பிடதக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here