இந்திய தொலை தொடர்பு துறையின் வரலாற்றில் மாபெரும் புரட்சி செயத ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ வரவுக்கு பின்னர் ஒரு ஜிபி டேட்டா கட்டணம் ரூ.10 ஆக குறைந்துள்ளதாக மேரி மீகர் அறிக்கை தெரிவிக்கின்றது.

1GB டேட்டா ரூ.284 விலையிலிருந்து ரூ.10 என குறைந்த மாயம் என்ன ?

இந்திய டேட்டா அறிக்கை

கடந்த 2014 ஆம் ஆண்டில் சராசரியாக 1ஜிபி டேட்டா விலை ரூ. 284 ($4.4) என்றிருந்த கட்டணமும் கடந்த மாரச் மாதம் முடிவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு ஜிபி டேட்டா ரூ.10.94($.17) என்ற விலையில் வழங்கப்பட்டுகின்றது. சராரசரியாக ஒரு வருடத்தில் 48 சதவிகிதம் அளவிற்கு டேட்டா விலை குறைந்துள்ளதாக  Mary Meeker அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1GB டேட்டா ரூ.284 விலையிலிருந்து ரூ.10 என குறைந்த மாயம் என்ன ?

சில முக்கிய குறிப்புகள் அறிக்கையிலிருந்து பின் வருமாறு ;-

ஜூன் 2014-ல் ஒரு ஜிபி டேட்டா கட்டணம் ரூ.284 ($4.4)

ஜூன்  2015-ல் ஒரு ஜிபி டேட்டா கட்டணம் ரூ.257 ($4.0)

ஜூன் 2016-ல் ஒரு ஜிபி டேட்டா கட்டணம் ரூ.225 ($3.5)

ரிலையன்ஸ் ஜியோ ஜூன் செப்டம்பர் 2016ல் களமிறங்கியது.

டிசம்பர் 2016-ல் ஒரு ஜிபி டேட்டா கட்டணம் ரூ.174 ($2.7)

மார்ச் 2017-ல் ஜியோ நிறுவனத்தின் ஒரு ஜிபி டேட்டா கட்டணம் ரூ.11 ($.17)

மேலும் சர்வதேச அளவில் இந்தியாவின் மாதந்திர மொபைல் டேட்டா பயன்பாடு கடந்த 6 மாதங்களில் 10 மடங்கு கூடுதலாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜூன் 2016ல் மாதந்திர டேட்டாபயன்பாடு 200 மில்லியன் ஜிபி டேட்டா என்றிருந்த நிலையில் தற்போது மாதம் 1.2 பில்லியன் ஜிபி டேட்டா என உயர்ந்துள்ளது.

1GB டேட்டா ரூ.284 விலையிலிருந்து ரூ.10 என குறைந்த மாயம் என்ன ?

இந்திய டேட்டா பயன்பாட்டில் ம்யூசிக் மற்றும் வீடியோ ஸ்ட்ரிம்ங் தளங்களான யூடியூப் போன்றவற்றுடன் சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வாட்ஸ்அப் பயன்பாடு அதிவேகத்தில் வளர்ந்து வருகின்றது. அதாவது 2009 ஆம் ஆண்டில் இணைய பயன்பாடு 4 சதவிகிதம் என்றிருந்த நிலையில் 2016யின் முடிவில் 27 சதவிகிதமான உயர்ந்ததே இதற்கு ஆதாரமாகும்.

1GB டேட்டா ரூ.284 விலையிலிருந்து ரூ.10 என குறைந்த மாயம் என்ன ?

Kleiner Perkins என்ற ஆய்வறிக்கையின் படி மொத்த இணைய பயன்பாட்டில் 72 சதவிகித பங்களிப்பை 35 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கின்றது. மேலும் சராசரியாக ஒரு வாரத்தில் இந்தியர்கள் 28 மணி நேரத்தை மொபைலில் செலவிடுகின்றனர். மொபைலில் வீடியோ மற்றும் ம்யூசிக் போன்றவற்றுக்கு 45 சதவிகிதமும், தேடுதல், சமூகவலைதளம் மற்றும் மெசேஜ் போன்றவற்றுக்கு 34 சதவிகிதம் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் 4 சதவிதமும் பயன்படுத்துவாக அறிக்கை தெரிவிக்கின்றது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here