ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஜியோ தொலை தொடர்பு நிறுவனத்தின் ஜியோ ஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எவ்வாறு வழங்கப்படும் என அறிந்து கொள்ளலாம்.

ஜியோ ஃபை இலவசம்..! உண்மையா ? - முழுவிபரம்

 

ஜியோ ஃபை இலவசம்

ரூ.1999 மதிப்புள்ள ஜியோ ஃபை ரவுட்டர் கருவியை இலவசமாக வழங்குவதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து முழுவிபரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

பழைய டாங்கிலுக்கு 100 % கேஸ்பேக் சலுகை விபரம்

நீங்கள் பயன்படுத்தி வருகின்ற வேறு நிறுவனங்களின் மோடம் மற்றும் ரவுட்டர்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் அல்லது மினி ஸ்டோர் போன்றவற்றில் பழைய டாங்கில்களை கொடுத்து ஜியோஃபை வாங்கலாம். ஆனால் பழைய ஜியோஃபை கருவிக்கு இந்த சலுகை பொருந்தாது.

திரும்ப பெறப்படும் டாங்கில்களின் விபரம் பின்வருமாறு ;-

உங்களுடைய ஏர்டெல், ஐடியா, வோடபோன், டாடா, எம்டிஎஸ், ஆர்காம், மைக்ரோமேக்ஸ், D-லிங்க், ஹூவாய், ஐபால், ZTE, லாவா, இன்டெக்ஸ், நெட்கியர் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களின் கருவிகள் திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருவிகளை திரும்ப பெற்றுக்கொண்டாலும் ஜியோஃபை வாங்குபவர்கள் ரூ.1999 கட்டணம் செலுத்துவதுடன் முதல் ரீசார்ஜ் எனப்படுகின்ற தன் தனா தன் பிளான் அடிப்படையில் ரூ.408 அல்லது ரூ.509 ரீசார்ஜ் செய்வதனால் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படும்.

அதன்பிறகு, நீங்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யும் பொழுது ரூ. 201 மதிப்புள்ள ஜியோ பூஸ்டர் பேக் அதாவது தினசரி பயன்பாட்டிற்கு பிறகு வேகம் குறையாமல் இணையத்தை பயன்படுத்த உதவும் மாதம் 5GB டேட்டாவை 10 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகின்றது.

இதன் மதிப்பு 10×201 = ரூபாய் 2010 எனவே தற்பொழுது  நீங்கள் டாங்கில் வாங்கிய பணத்தை 100 சதவீதம் அடுத்த 10 மாதங்களில் திரும்ப பெறலாம். இதுவே 100 சதவீத கேஸ்பேக் பிளானாகும்.

ஜியோ ஃபை இலவசம்..! உண்மையா ? - முழுவிபரம்

புதிய ஜியோ ஃபை ஹாட்ஸ்பாட் சலுகை

ஜியோ நிறுவனம் முதன்முறையாக ஜியோ ஃபை 4G ஹாட் ஸ்பாட்டை வாங்குபவர்கள் ரூ.1999 கட்டணம் செலுத்துவதுடன் முதல் ரீசார்ஜ் எனப்படுகின்ற தன் தனா தன் பிளான் அடிப்படையில் ரூ.408 அல்லது ரூ.509 ரீசார்ஜ் செய்வதனால் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படும்.

அதன்பிறகு, நீங்கள் மாதந்தோறும் ரீசார்ஜ்செய்யும் பொழுது ரூ. 201 மதிப்புள்ள ஜியோ பூஸ்டர் பேக் அதாவது தினசரி பயன்பாட்டிற்கு பிறகு வேகம் குறையாமல் இணையத்தை பயன்படுத்த உதவும் மாதம் 5GB டேட்டாவை 5 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகின்றது.

இந்த சலுகையின் வாயிலாக ரூ.1005 வரை கேஸ்பேக் பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோ ஃபை இலவசம்..! உண்மையா ? - முழுவிபரம்

2ஜி ,3ஜி, 4ஜி என எந்த மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் உள்பட 10க்கு மேற்பட்ட கருவிகளை வைபை வாயிலாக இணைய இணைப்பை பெறலாம்.

நம்முடைய தளத்தில் முன்பு வெளிவந்த ஜியோஃபை வாங்கினால் லாபமா ? நஷ்டமா பதிவை படிக்க சொடுக்குக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here