91 சதவீத டேட்டா கார்டு சந்தையை கைப்பற்றிய ஜியோ ஃபை

இந்தியாவின் 4ஜி சேவையில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஜியோ நிறுவனம் டேட்டா கார்டு சந்தையில் ஜியோ ஃபை கருவி வாயிலாக 91 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது.

ஜியோ ஃபை டேட்டா கார்டு

ஜியோ நிறுவனம் விற்பனை செய்து வரும் ஜியோஃபை மீஃபை கருவி தொடர்ந்து டேட்டா கார்டு சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. 2016 ஆம் ஆண்டின் பாதியில் 16 % சந்தை மதிப்பிலிருந்து இந்த கருவி 77 சதவீத சந்தையை கைப்பற்றியதை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

2ஜி, 3ஜி மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப் போன்றவற்றை எங்கேயும் இணைக்கும் வகையிலான ஜியோஃபை கருவி ரூ.1999 விலையில் விற்பனை செய்யப்படடுகின்றது. பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்ற இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட்போனில் ஜியோ 4ஜி வாய்ஸ் ஆப் வாயிலாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4ஜி டேட்டா கார்டு டெலிவரியில் 90 சதவீத பங்களிப்பும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 91 சதவீதம் என மொத்த சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 4ஜி ஜியோ ஃபை டேட்டா கார்டு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

3ஜி டேட்டா கார்டு சந்தை 6 மாதங்களாக 60 சதவீத வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக சைபர் மீடியா அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

Recommended For You