இந்தியாவின் ஸ்மார்ட்போன் என ரிலையன்ஸ் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ போன் ரூ.1500 டெபாசிட் தொகை செலுத்தி ஆகஸ்ட் 24ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜியோ போன் முன்பதிவு

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் ஜியோ நிறுவனத்தின் 4ஜி ஆதரவு பெற்ற பீச்சர் ரக ஜியோ போன் முற்றிலும் இலவசமாக வழங்கும் வகையிலான நோக்கில் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முறையற்ற செயல்பாட்டினை தவிர்க்கும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப பெறதக்க வகையிலான பாதுகாப்பு வைப்பு நிதியாக ரூ.1500 செலுத்துவது இந்த போன் வாங்க கட்டயாமாகும்.

நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 15, 2017 முதல் ஜியோ போன் மொபைல் டெமோ மாடல்கள் தற்போது குறிப்பிட்ட சில ரிலையன்ஸ் பணியாளர்களுக்கு மட்டுமே சோதனைக்காக கிடைக்க பெற தொடங்கி உள்ளது.

எங்கே முன்பதிவு செய்ய ?

ஜியோ ரீடெயிலர்கள், ரிலையன்ஸ் மினி டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் டிஜிட்டல் ஸ்டோர் போன்றவற்றுடன் ஜியோ இணையதளம் மற்றும் மை ஜியோ ஆப் வாயிலாக முன்பதிவு செய்யும் வகையிலான திட்டத்தை ஜியோ செயல்படுத்த உள்ளது.

என்னென்ன ஆவனங்கள் தேவை ?

தனிநபர் பயன்பாட்டிற்கு வாங்கும் நபர்கள் ஜியோபோன் வாங்குவதற்கு முன்பதிவு செய்ய ஆதார் எண் கொண்டிருப்பது மிக அவசியமாகும். ஒரு ஆதார் எண் கொண்டு ஜியோ ஃபோன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

விற்பனையாளர்கள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட மொபைல்களை விற்பனை செய்யும் வகையில் PAN அல்லது GSTN போன்றவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

jio.com இணையதளத்தில் மொபைல் வருகை விபரத்தை அறிந்து கொள்ள Keep Me Posted என்ற பெயரில் இதனை வழங்கி வருகின்றதை பலரும் அறிந்திருப்பீர்கள்.

ஜியோபோன் 4ஜி மொபைல் நுட்ப விபரங்கள்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் என்ற அடைமொழியுடன் பீச்சர் ரக மொபைல் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் 4ஜி வோல்ட்இ தரத்தை பெற்றதாக வரவுள்ள ஜியோபோன் 2.4 அங்குல QVGA திரையுடன் கூடிய இது ஃபயர்பாக்ஸ் கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்படுகின்றது.

குவால்காம் மற்றும் ஸ்பிரெட்டிரம் என இரண்டு நிறுவனங்களின் சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற வகையில் வெளியிடப்பட உள்ள இந்த மொபைல் 512 எம்பி ரேம் கொண்டு இயக்கப்பட்டு 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் 32ஜிபி வரையிலான நீட்டிக்கும் திறன் பெற்ற மைக்ரோ எஸ்டி ஸ்லாட் பெற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோபோன் டேட்டா பிளான்

28 நாட்கள் வேலிடிட்டி செல்லுபடியாகின்ற பீச்சர் போனுக்கு என ரூ.153 திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும், இலவச எஸ்எம்எஸ் போன்றவற்றுடன் தினசரி பயன்பாடிற்கு 512 எம்பி 4ஜி உயர் வேக டேட்டா அதன் பிறகு 128Kbps வேகத்தில் இணையத்தை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இரு நாட்களுக்கு ரூ.24 மற்றும் 7 நாட்களுக்கு ரூ.54 என மொத்தம் மூன்று பிளான்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கூடுதல் திட்டங்கள் விரைவில் வெளியாகலாம்.

வாரத்திற்கு 50 லட்சம் மொபைல்கள் டெலிவரி செய்யப்பட உள்ள நிலையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் முன்பதிவு செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 24, 2017 முன்-பதிவு தொடங்கப்பட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.