இன்று முதல் ஜியோபோன் முன்பதிவு தொடங்கப்பட உள்ள நிலையில் ஆன்லைன் வழியாக மாலை 5.30 மணி முதல் ஜியோ ஃபோன் வாங்க முன்பதிவு செய்யலாம்.

ஜியோபோன் முன்பதிவு

முற்றிலும் இலவசம் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ மொபைல் போன் திரும்ப பெறதக்க வகையிலான பாதுகாப்பு வைப்பு நிதியாக ரூ. 1500 செலுத்த வேண்டும். இந்த கடடணம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

2.4 அங்குல திரையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்த மொபைலில் முன்னேற்பாடாக ஜியோ செயலிகளான ஜியோ ம்யூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து ஜியோ நிறுவன ஆப்ஸ்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.

4G LTE ஆதரவுடன் கூடிய இந்த மொபைல்கள் 22 இந்திய மொழிகள் உட்பட மைக்ரோ எஸ்டி மற்றும் குரல் வழி உத்தரவுக்கு கீழ் படியும் வகையில் இருக்கும். இந்த மொபைலில் நீங்கள் குரல் வழியாக கேட்கும் கேள்விகளுக்கும் பதில் வழங்கும், அதாவது அலெக்ஸா , சிரி, பிக்ஸ்பீ, கூகுள் அசிஸ்ட் போன்ற செயல்பாட்டை பெற்றிருக்கும்.

ஜியோபோன் வாயிலாக பிரதமரின் நாமோஆப் உள்ளிட்ட முக்கியமான ஆப்கள் ப்ரீலோடு செய்யப்பட்டுள்ளன. தானாகவே அப்டேட் ஆகும் வகையிலான மென்பொருள் ஆதரவு , வை-ஃபை,  NFC ஆதரவினை பெற்றிருக்கும்.

இந்த ஜியோ ஃபோன் வாயிலாக உஙங்களுடைய எந்த தொலைக்காட்சியையும் இணைத்து இணையத்தின் வாயிலாக அதன் சேவைகளை பெறலாம்.

ஜியோபோன் டேட்டா பிளான்

ஜியோஃபோன் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் (28 நாட்கள்) அதிகபட்சமாக ரூ.153 செலுத்தினால் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் எந்த நிறுவனத்துக்கும் மற்றும் வரம்பற்ற குறுஞ்செய்தி (100) உள்பட வரம்பற்ற டேட்டா (இது தினசரி 512எம்பி உயர் வேக டேட்டா வழங்கப்பட்டும்) என குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர ரூ. 24 கட்டணத்தில் இரண்டு நாட்கக்கும், 7 நாட்களுக்கு பெற ரூ. 54 கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்.

முன்பதிவு அவசியம்

இன்று மாலை 5.30 மணிக்கு அதிகார்வப்பூர்வமாக ஜியோ போன் முன்பதிவு தொடங்கப்படுகின்றது.

எங்கே முன்பதிவு ; ஸ்மார்ட்போனில் உள்ள மை ஜியோ ஆப் (Myjio app) மற்றும் ஜியோ இணையதளம் (jio.com) போன்றவற்றில் Pre Book now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யலாம் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்வதற்கு மாலை 5.30 மணி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக ரூ. 500 செலுத்தலாம், அடுத்தகட்டமாக ஜியோஃபோனை டெலிவரி செய்யும்போது மீதமுள்ள தொகை ரூ.1000 செலுத்தலாம்.

பணம் செலுத்துவது எவ்வாறு ?

ஜியோமணி ,பேடிஎம் போன்ற இ-வால்ட்கள் தவிர யூபிஐ, கிரெடிட் , டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக ரூ. 500 பணத்தை செலுத்தலாம்.

36 மாதங்களுக்கு பிறகு ரூ. 1500 கட்டணத்தை ஜியோ இன்ஃபோகாம் திரும்ப கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு தொடர்ந்து நமது இணையதளத்துடன் இணைந்திருங்கள்..!