விலையில்லா ரிலையன்ஸ் ஜியோபோன் 4ஜி ஃபீச்சர் மொபைலில் வாட்ஸ்அப் மெசேன்ஜரை இணைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோபோன் வாட்ஸ்அப்

4ஜி வசதி பெற்ற ஜியோ பீச்சர் ரக மொபைல் ஃபயர்பாக்ஸ் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் கெய்ஒஎஸ் இயங்குதளத்தில் பல்வேறு வசதிகளை பெற்றதாக வரவுள்ள நிலையில் இந்த மொபைலில் வாட்ஸ்அப் ஆரம்பகட்டத்தில் இடம்பெறாது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு பின் வரும் மாதங்களில் ஜியோபோனில் உலகின் முன்னணி வாட்ஸ்அப் செயலியை அறிமுகம் செய்யும் நோக்கில் , இதற்கான பிரத்யேகமான வாட்ஸ்அப் லைட் செயலியை கொண்டு வருவதற்கான முயற்சியை ஜியோ மற்றும் வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஃபேக்டர்டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜியோபோன்-க்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஜியோ நிறுவன செயலிகளான ஜியோ சினிமா, ஜியோ நியுஸ், ஜியோ ம்யூசிக் போன்றவற்றை பெற்றதாக வரவுள்ள நிலையில் தினசரி 100 கோடி மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சேர்க்கப்படலாம்.

மேலும் இங்கே க்ளிக் பன்னுங்க.. ஜியோபோன் செய்திகள் படிக்க, எங்களை பேஸ்புக்கில் பின் தொடர Fb.com/gadgetstamilan