ஜியோபோன் எனும் இலவச 4ஜி போன் வரவுள்ளதால் இந்திய தொலைத்தொடர்புத் துறை மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகுமா ?  இங்கே அறிந்து கொள்ளலாம்.

ஜியோஃபோன்

20 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட இந்தியா தொலைத்தொடர்பு அனுபவத்தினை பெற்ற நிறுவனங்களையே கலங்க வைக்கின்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்த இலவச அழைப்புகள் உள்ளிட்ட சிறப்பு டேட்டா சலுகைகள்  மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலவசம் என்ற வார்த்தையை பல்வேறு வகைகளில் தன்னுடைய விளம்பரங்களில் தொடர்ந்து பயன்படுத்தி மிகுந்த பரபரப்பாக இயங்கி வரும் ஜியோ நிறுவனத்தால் போட்டியாளர்களான ஏர்டெல், வோடஃபோன் , ஐடியா ஏர்செல் உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகுந்த பாதிப்பினை சந்தித்துள்ளது.

ஜியோ நிறுவனத்தின் நோக்கம், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த தூரத்திற்கும் செல்ல ரிலையன்ஸ் தயாராக இருக்கும் சூழ்நிலையில், 2ஜி சேவையில் பெரும்பான்மையான பயனாளர்கள் வட்டாரத்தை பெற்று விளங்கும் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை பெரும்பான்யோனரை நிரந்தரமாக இழக்கும் சூழ்நிலையில் உள்ளன.

நாட்டில் உள்ள 100 கோடி மொத்த மொபைல் தொலைத்தொடர்பு பயனாளர்கள் எண்ணக்கையில், 75 கோடிக்கு மேற்பட்ட மக்கள் அடிப்படையான இரண்டாம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையில் அழைப்புகள் மற்றும் முக்கிய குறுஞ்செய்திகள் பெறும் வகையிலான சேவையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

கிராமப்புற மற்றும் நடுத்தர நகரங்களில் வாழும் மக்களின் முதல் தேவை அழைப்புகள்  மட்டுமே பிரதானமாக உள்ள சூழ்நிலையில், மாதந்தோறும் சராசரியாக ரூ.100-க்கு குறைவான சராசரி வருமானத்தை நிறுவனங்கள் பெற்று வரும் சூழ்நிலையில் இதனை ரூ. 150 ஆக உயர்த்தும் நோக்கத்தில் ஜியோ அறிமுகம் செய்துள்ள திட்டம்தான் ரூ.153 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை 28 நாட்களுக்கும், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா பிரியர்களுக்கு 512எம்பி வழங்கியுள்ளது.

தற்போதைய 2ஜி சேவையை பயன்படுத்தி வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு, இது போன்ற எந்த சலுகைகளையும் மற்ற நெட்வொர்க்குகள் வழங்கவில்லை, எனவே மொத்த 2ஜி பயன்பாட்டில் உள்ள 60 சதவிகதம் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையில் ஜியோ வழங்கும் ஜியோபோன் சேவைக்கு மாறும் சூழ்நிலை ஏற்படும் என்பதனால் போட்டியாளர்களான ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஏர்செல், பிஎஸ்என்எல் போன்று நிறுவனங்களின் வருவாய் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும், என்பதனால் ஈடுகட்டும் நோக்கில் அதிரடியான ஆஃபர்களை 2ஜி பிரியர்களும் இனி பெறலாம்.

ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு மட்டுமே 4ஜி என்றிருந்த சேவை இனி அனைவருக்கும் பீச்சர் போன் வாயிலாக சாத்தியமாக உள்ளது. இதனை ஈடுகட்ட ஏர்டெல் நிறுவனம் முதன்மையாக , போட்டியாளரை எதிர்க்க மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தலாம், என எதிர்பார்க்கப்படும் பீச்சர் போன்களுடன் இலவச சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

வோடஃபோன்-ஐடியா என இரு நிறுவனங்களும் இந்தாண்டின் இறுதிக்குள் முழுமையான இணைப்பு நடந்தேறும் என்பதனால், இணைப்பை முன்னிட்டு அதிரடியான அறிவிப்புகளை இரு நிறுவனங்களும் வெளியிடலாம்.

ஏர்செல், பிஎஸ்என்எல், டாடா டோகோமா, ஆர்காம் போன்ற நிறுவனங்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு தயாராகும் என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

மீண்டும் ஒரு ஜியோ புரட்சி ஜியோபோன் வாயிலாக தொடங்குமா ? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..!

மேலும் படிங்க ஜியோபோன் செய்திகள் பற்றி இங்கே படிக்கலாம். எங்களை பேஸ்புக்கில் பின்தொடர –> fb.com/gadgetstamilan