ஜியோ வழங்குகின்ற தன தனா தன் சலுகைகளை வாயிலாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வோடபோன் புகார் அளித்துள்ளது.

ஜியோ இலவசங்கள் மீது வோடபோன் புகார்

வோடபோன் புகார்

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்ற சேவைகள் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வோடபோன் சார்பில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய வரவான ஜியோ சமீபத்தில் அறிவித்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகையின் கீழ் மூன்று மாதங்களுக்கு கூடுதல் இலவச சலுகைகள் ரூ.402க்கு வழங்கப்பட்டது, இதனை டிராய் நிராகரித்ததை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட தன் தனா தன் சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு மாதங்களுக்கு கூடுதல் சலுகைகள் ரூ.408 க்கு வழங்கப்பட்டுள்ளது.
வோடபோன் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டில் 90 நாட்களுக்கும் அதிகமாக இலவச வாய்ஸ் கால்களை சிறப்பு சலுகையின் கீழ் வழங்குவது, டிராய் விதிமுறைகளை மீறுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ இலவசங்கள் மீது வோடபோன் புகார்
இந்த புகாருக்கு, வோடபோன் குற்றச்சாட்டுகளை ஜியோ பகிரங்கமாக மறுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வோடபோன் மனு மீதான விசாரணை ஜூலை 27ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சேவைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன் நெட்வொர்க் சோதனைகளை மேற்கொள்வது சார்ந்த விதிமுறைகளை வகுப்பது குறித்த குற்றச்சாட்டை வோடபோன் திரும்ப பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here